RRR Others USA
www.garudabazaar.com

OFFICIAL: போடு வெடிய...'RRR' படம் இந்த பிரபல தமிழ் சேனல்ல தான் ஒளிபரப்பாகும்..! செம தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: RRR திரைப்படத்தின் டிவி ஒளிபரப்பு உரிமையை தமிழின் பிரபல சேனல் கைப்பற்றி உள்ளது.

RRR Movie Satellite Rights Bagged by Star Vijay TV

ஆர் ஆர் ஆர் திரைப்படம் பல மொழிகளில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழ் (2டி)(3டி), தெலுங்கு (2டி)(3டி)(ஐமாக்ஸ்), ஹிந்தி (2டி)(3டி) ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றது. டிவிவி தானய்யா தயாரித்த 'ஆர்ஆர்ஆர்'-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் திரு  சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

RRR Movie Satellite Rights Bagged by Star Vijay TV

தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகி உள்ளது. படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார்.

ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு என்று இயக்குநர் திரு ராஜமௌலி கூறியுள்ளார்.

RRR Movie Satellite Rights Bagged by Star Vijay TV

இந்த படத்துக்கு CBFC மூலம் U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது. படத்தின் ரன்னிங் டைம்  3 மணி நேரம் 5 நிமிடங்கள். இந்நிலையில் தமிழ் மொழியில் RRR படத்தை ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் விஜய் டிவி கைப்பற்றியுள்ளது. RRR படத்தின் ஆரம்ப டைட்டில் கார்டில் இந்த தகவலை படக்குழு Official ஆக Satellite Partner என அறிவித்துள்ளது.   

RRR Movie Satellite Rights Bagged by Star Vijay TV

தெலுங்கு கன்னட மொழி உரிமையையும் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மலையாள உரிமையை ஏசியாநெட்டும், ஹிந்தி உரிமையை ஜி தொலைக்காட்சியும் கைப்பற்றி உள்ளது. 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

RRR Movie Satellite Rights Bagged by Star Vijay TV

People looking for online information on RRR, RRR Movie, RRR Tamil, RRR Tamil TV, RRR TV will find this news story useful.