RRR Others USA

ஆஹா‌.. உற்சாகத்தில் பாரதி கண்ணம்மா ரசிகர்கள்.. லக்ஷ்மியின் பிளான் வேலை செய்யுது!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தந்தையின் அருகே இருக்க, லட்சுமி போட்ட பிளான்கள் வெற்றி பெற்று வந்த நிலையில், அடுத்ததாக செய்துள்ள அசத்தல் திட்டம் ஒன்று, பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது.

barathi and kannamma get closer again by lakshmi

இந்த வாரம் OTT-யில் ரிலீஸ் ஆகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!

பாரதி கண்ணம்மா தொடரின் தற்போதைய ப்ரோமோக்கள் மற்றும் காட்சிகள், ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் சென்று கொண்டிருக்கிறது.

பாரதி தான் தன்னுடைய தந்தை என்பதை தெரிந்து கொண்ட லட்சுமி, தந்தையுடன் அதிக நேரம் இருக்க வேண்டும் என்பதில் தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

பலே பொண்ணுங்க இந்த லட்சுமி

தந்தை என தெரிந்ததும் முதல் முறையாக மருத்துவமனையில் சென்று பார்த்தது, ஹேமாவையும் தன்னுடைய தங்கையாக லட்சுமி ஏற்றுக் கொண்டது, அங்கிள் பாரதியை திட்டம் போட்டு, டாக்டர் அப்பா என மாற்றியது உள்ளிட்ட லட்சுமியின் பல விஷயங்கள், பார்வையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. பாரதியின் வீட்டில் தூங்குவது போல நடித்து லட்சுமி போட்ட நாடகமும், சபாஷ் போட வைத்திருந்தது.

barathi and kannamma get closer again by lakshmi

பாரதிக்கும் பாசம் வந்துருச்சு..

இதனிடையே, பாரதி தான் தந்தை என தெரிந்து பின்பு, லட்சுமிக்கு மட்டுமல்ல, பாரதிக்கும் மகள் மீது அதீத அன்பு உருவாக ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணம், லட்சுமிக்கு தண்ணீர் எடுத்து வர வேண்டி, சோஃபாவில் இருந்து பாரதி எந்திரிக்க, அவர் விலகிய மறுகணமே, மேலே சுற்றிக் கொண்டிருந்த ஃபேன், பாரதி இருந்த சோஃபா மீது விழுந்தது தான்.

இதனை அறிந்த அனைவரும், ஒரு நிமிடம் உறைந்து போயினர். இன்னொரு பக்கம், லட்சுமி குழந்தையாக இருக்கும் போதும், இதே போன்று ஒரு முறை, லட்சுமிக்காக எழுந்த போது, சோஃபாவில் ஃபேன் விழுந்து கிடந்து, தான் தப்பிப்பது பாரதிக்கு நினைவில் வரும். இப்படி, லட்சுமி தன் அருகே இருப்பதால், தனக்கு எதுவும் நடக்காததை எண்ணும் பாரதிக்கு லட்சுமி மீது அன்பு உருவாக வாய்ப்பாக அமைகிறது.

barathi and kannamma get closer again by lakshmi

அடுத்த கட்டத்துக்கு பொண்ணு போயிடுச்சு..

இந்நிலையில், தந்தை அன்பை பெற்ற லட்சுமி, அடுத்ததாக தாய் கண்ணம்மாவை தந்தையுடன் இணைக்க போட்ட பிளான் தான், மீண்டும் ஒருமுறை ரசிகர்களை பாரதி கண்ணம்மா பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது. பள்ளிக் குழைந்தைகள் டூருக்கு செல்ல, பெற்றோர்களும் உடன் செல்கின்றனர். அப்போது, லட்சுமி மற்றும் ஹேமா ஆகியோர் அடுத்தடுத்து உட்கார, லட்சுமியை பாரதி அருகே உட்கார சொல்கிறார் கண்ணம்மா.

barathi and kannamma get closer again by lakshmi

ஆனால் லட்சுமியோ, நானும் ஹேமாவும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டு வருவோம் என்றும், கண்ணம்மாவை பாரதி அருகே சென்று உட்காரும் படியும் கூறுகிறார். இதனைக் கேட்டு தயக்கத்தில் நிற்கும் கண்ணம்மா, மகளை எழ வைக்க வேண்டி, வற்புறுத்தி பார்க்கிறார். ஆனாலும், லட்சுமி கேட்பதாக இல்லை.

இனிமே ரொமான்ஸ் தான்..

அந்த நேரத்தில், திடீரென பேருந்தின் டிரைவர் பிரேக் போட, பாரதி மீது விழுகிறார் கண்ணம்மா. மறுநொடியே பேக் கிரவுண்டில் மியூசிக் ஓட, ரொமான்ஸ் பற்றிக் கொள்கிறது. இதுநாள் வரையில், பிரிந்து வாழ்ந்து கொண்டிருக்கும் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் சேர வேண்டி, லட்சுமி போட்ட பிளான் சிறிதாக வொர்க் அவுட் ஆகியுள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

CWC 3 : மன்னிப்பு கேட்ட தாமு.? "எப்பவும் கலகலன்னு இருக்குறவங்க, இப்ப கண் கலங்குறாங்க.."

தொடர்புடைய இணைப்புகள்

barathi and kannamma get closer again by lakshmi

People looking for online information on Barathi, Bharathi Kannamma, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Episode, Bharathi Kannamma Serial Promo, Kannamma, Lakshmi, Vijay Television will find this news story useful.