RRR Others USA
www.garudabazaar.com

கண்ணான கண்ணே மோடில் பாரதி கண்ணம்மா.. அப்பான்னு தெரிஞ்சும் கூப்பிட முடியல.. தவிக்கும் லட்சுமி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான 'பாரதி கண்ணம்மா' குறித்து எதுவும் புதிதாக சொல்லித் தெரிய வேண்டும் என்பதில்லை.

Barathi kannamma lakshmi came to see barathi in hospital

"அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி.." ஃபுல் ஆக்ரோஷம்.. நடிகை ஸ்ருதி ஹாசனின் ரணகளமான வொர்க் அவுட்

இந்த தொடருக்கு என்று, பிரத்தியேக ரசிகர் பட்டாளமே உள்ளது. அது மட்டுமில்லாமல், ப்ரோமோக்கள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களும் அதிகம் உள்ளனர்.

அந்த வகையில், பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரோமோ ஒன்று, அதிக நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா தொடரின் முதன்மை கதாபாத்திரங்களான பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், பிரிந்து வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரிந்தது தான். இந்த தம்பதியருக்கு பிறந்த குழந்தைகள் தான் லட்சுமி மற்றும் ஹேமா ஆகியோர். இதில் லட்சுமி, கண்ணம்மாவிடம்  வளர்ந்து வருகிறார். இன்னொரு குழந்தையான ஹேமா, பாரதியிடம் தத்துப் பிள்ளையாக வளர்ந்து வருகிறார்.

நம்பாத பாரதி

ஆனால், அது தன்னுடைய குழந்தை தான் என்பது பாரதிக்கு தெரியாது. இந்த உண்மையை எத்தனையோ முறை எடுத்துக் கூற, கண்ணம்மா முயன்றும், அதனை பாரதி நம்புவதாக இல்லை. இதனைத் தொடர்ந்து, கண்ணம்மாவிடம் வளரும் லட்சுமிக்கு தன்னுடைய தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் உருவாகியது. இதற்காக, தனக்கு கிடைத்த ஆதாரம் ஒன்றுடன் தந்தையைத் தேடி செல்கிறார் லட்சுமி.

Barathi kannamma lakshmi came to see barathi in hospital

உண்மையை அறிந்த லட்சுமி

அப்போது தான் எதிர்பாராத விதமாக, தனக்குக் கிடைத்த முகவரியின் அடிப்படையில், பாரதி வீட்டிற்கு செல்கிறார் லட்சுமி. சந்தேகத்துடன் உள்ளே நுழையும் லட்சுமிக்கு இங்கு எனது தந்தை எப்படி இருப்பார் என்ற குழப்பமும் இருக்கிறது. தொடர்ந்து, வீட்டிற்குள் சென்ற லட்சுமி, மேலே சென்ற போது, அங்கே அவரின் தாய் கண்ணம்மா, பாரதி உள்ளிட்ட பலர் இருப்பதை பார்க்கிறார்.

கண்ணீரே வந்துருச்சு

அந்த சமயத்தில், பாரதியிடம், "லட்சுமிகிட்ட நீங்க தான் அவ அப்பாங்கிற உண்மைய சொல்ல போறேன்" என கண்ணம்மா கண்ணீருடன் சொல்கிறார். இதனை மறைந்து நின்று கேட்கும் லட்சுமி மனதுக்குள், "டாக்டர் அங்கிள் தான் என் அப்பாவா?" என ஆச்சரியத்தில், ஆனந்த கண்ணீரும் வடிக்கிறார்.

சுமார் எட்டு ஆண்டுகளாக, தன்னுடைய அப்பா யார் என்பது தெரியாமல் இருந்து வந்த லட்சுமி, அதன் உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொண்டுள்ள நிலையில், தந்தை பாரதியைத் தேடிச் மருத்துவமனைக்கு செல்வது தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

உங்க கூடயே இருக்கணும்

இதில், மருத்துவமனைக்கு வந்த லட்சுமியிடம், "ஸ்கூலுக்கும் போகாம, வீட்டுக்கும் போகாம இங்க வந்து நிக்குறே?" என பாரதி கேள்வி கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் லட்சுமி, "எனக்கு உங்க கூடயே இருக்கணும்னு ஆசையா இருக்கு" என ஏக்கத்துடன் சொல்கிறார். உடனடியாக, பாரதியும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கு பாரதியை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார் லட்சுமி.

Barathi kannamma lakshmi came to see barathi in hospital

சாப்பாடு ஊட்டி விடும் பாரதி

இது பற்றியும் பாரதி கேள்வி கேட்க., "என்னமோ தெரியல அங்கிள். உங்களையே பாத்துட்டு இருக்கனும் போல தோணுது" என லட்சுமி சொல்கிறார். தொடர்ந்து, தனக்கு சாப்பாடு ஊட்டி விடும்படி, லட்சுமி கேட்க, அதுக்கு என்ன என பாரதியும் சாப்பாடு ஊட்டி விடுகிறார்.

இத்தனை நாட்கள் அப்பா யார் என்பது தெரியாமல் இருந்த லட்சுமிக்கு, தற்போது அது யார் என்பது தெரிய வந்ததும், அவரின் அருகே மட்டும் இருக்க வேண்டும் என துடிக்கிறார். ஆனாலும், அப்பா என அழைக்க முடியாத லட்சுமியின் ஏக்கம், பார்போரையும் ஏங்க வைத்துள்ளது.

"இந்த தப்ப தயவு செஞ்சு பண்ணாதீங்க.." பாலா - நிரூப் மோதல்.. ஃபேன்ஸ்க்கு சிம்பு போட்ட அன்பு கட்டளை

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Barathi kannamma lakshmi came to see barathi in hospital

People looking for online information on Barathi Kannamma, Barathi kannamma lakshmi, Barathi Kannamma Serial, Barathi Kannamma Serial Episode, Vijay Television will find this news story useful.