RRR Others USA

இந்த வாரம் OTT-யில் ரிலீஸ் ஆகும் இந்திய படங்கள்.. எது? & எப்ப?.. Full List ரெடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனாக்கு பிறகான காலகட்டத்தில் ஓடிடி எனும் மீடியம் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் பார்க்கவும், திரையரங்குகளில் படம் பார்க்கும் போது ஏற்படும் சில சிக்கல்களை தவிர்க்கவும் இந்திய மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது

This March last week OTT Release Tamil Telugu Hindi films

திரையரங்கில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளங்களில் பீரிமியராக வெளியாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே போல, திரையரங்குகளில் வரும் படங்கள், குறிப்பிட்ட சில தேதிக்கு பின், பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகின்றன. அப்படி நேரடியாகவும், திரையரங்க ரிலீசுக்கு பிறகும், ஓடிடி தளங்களில், இந்த மார்ச் இறுதி வாரம் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாவ்…. செம்ம fun ride இருக்கு போல… பீஸ்ட் unseen வைரல் புகைப்படம்!

பீஷ்ம பர்வம்

மெகாஸ்டார் மம்மூட்டி நடிப்பில், கடைசியாக 'ஒன்' என்ற திரைப்படம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, அமல் நீரத் இயக்கத்தில், 'பீஷ்ம பர்வம்' திரைப்படம்  (03.03.2022) அன்று ரிலீசாகி உள்ளது. அமல் நீரத் இயக்கிய முதல் திரைப்படமான 'Big B'யில் மம்மூட்டி தான் கதாநாயகனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, 'பீஷ்ம பர்வம்' என்னும் திரைப்படத்தின் மூலம், இருவரும் மீண்டும் இணைந்தனர். மலையாள மொழியில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த இந்த படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆகியுள்ளது.

This March last week OTT Release Tamil Telugu Hindi films

இந்த படத்தை அமல் நீரத் தனது சொந்த அமல் நீரத் புரொடக்ஷன்ஸ் கீழ் இந்த படத்தை  தயாரித்துள்ளார்.தேவதாத் ஷாஜி, அமல் நீரத் ஆகியோருடன் இணைந்து எழுதிய பீஷ்ம பர்வம் கேங்க்ஸ்டர் டிராமா வகைமையில் இந்தப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் சவுபின் ஷாஹிர், நதியா மொயுடு, ஷைன் டாம் சாக்கோ, ஸ்ரீநாத் பாசி, ஃபர்ஹான் ஃபாசில், வீணா நந்தகுமார், அனேகா, அனசூயா, மாலா பார்வதி மற்றும் லீனா ஆகியோர் மம்முட்டியுடன் நடித்துள்ளனர்.

ராதே ஷ்யாம்

ராதே கிருஷ்ணா குமார் இயக்கத்தில், UV கிரியேஷன்ஸ் தயாரித்து கோபி கிருஷ்ணா மூவிஸ் வழங்கும் வெளிவந்துள்ள காதல் கதை களம் கொண்ட ராதே ஷியாம் திரைப்படத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, சச்சின் கெடேகர், பிரியதர்சி புலிகொண்டா, பாக்யஸ்ரீ, ஜெகபதி பாபு, முரளி ஷர்மா, குணால் ராய் கபூர், ரித்தி குமார், சாஷா செத்ரி, சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

This March last week OTT Release Tamil Telugu Hindi films

பிரபாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படத்தின் டிஜிட்டல் ப்ரீமியரை Prime Video அறிவித்துள்ளது. வாழ்க்கைக்கான அணுகுவதில் முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்ட இருவரின் காதல் கதை இது. விதியையும் ஊழ்வினையையும் முழுமையாக நம்பும் விக்ரம் ஆதித்யா (பிரபாஸ்) அறிவியலின் சக்தியைப் பெரிதும் நம்பும் பிரேர்னாவிடம் (பூஜா ஹெக்டே) காதலில் விழுகிறார். ராதே ஷியாம் திரைப்படத்தை ஏப்ரல் 1, 2022 முதல் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யலாம்.

யுத்த சத்தம்

யுத்த சத்தம்” திரைப்படத்தில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் எழில் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்க,தமிழகத்தின் முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். சாய் பிரியா தேவா நாயகியாக நடிக்க பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், , ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுத யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர். Kallal Global Entertainment சார்பாக  D.விஜயகுமரன்  "யுத்த சத்தம்" படத்தை தயாரித்துள்ளார். வெளிநாட்டில் மட்டும் டெண்ட் கொட்டா தளத்தில் இந்த படம் வெளியாகி உள்ளது.

இந்த படங்களுடன் வலிமை படத்தின் மலையாள மொழிபெயர்ப்பு ஜி5 ஒடிடியில் வெளியாகி உள்ளது.

”என்ன ஆனாலும் சரி…” வியர்வை வழிய ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் viral pic!

This March last week OTT Release Tamil Telugu Hindi films

People looking for online information on March last week OTT Release Movies, OTT Release Movies, Tamil Telugu Hindi films will find this news story useful.