RRR Others USA
www.garudabazaar.com

Barathi Kannamma : "இது உலக நடிப்புடா சாமி".. பாரதிக்காக லக்ஷ்மி பண்ணிய பாசாங்கு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாரதி கண்ணம்மா தொடரில், பாரதி தான் தன்னுடைய அப்பா என தெரிந்த பிறகு, லட்சுமி போட்டு வரும் மாஸ்டர் பிளான்கள், மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்பினைப் பெற்று வருகிறது.

BT : Lakshmi want to sleep in barathi house plans for that

சிபிராஜ் நடிப்பில் விரைவில் திரைக்கு வரும் புதிய படம்... சென்சார் போர்டு கொடுத்த ரிப்போர்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா', பார்வையாளர்களுக்கு பிடித்தமான வகையில், அசத்தலாக சென்று கொண்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக, வாரா வாரம் லட்சுமி போட்டு வரும் திட்டங்கள் தான், சீரியலின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது.

பாரதி தான் அப்பா..

பாரதியிடம் வளர்ந்து வரும் ஹேமாவுக்கும், கண்ணம்மாவிடம் வளர்ந்து வரும் லட்சுமிக்கும், தங்களுடைய பெற்றோர்கள் யார் என்பது பற்றி, முழு விவரமும் தெரியாமல் இருந்து வந்தது. அப்போது தான், தன்னுடைய தந்தை யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம், லட்சுமிக்கு உருவானது. அதன்படி, இத்தனை நாட்கள் அங்கிள் என அழைத்த பாரதி தான், தன்னுடைய தந்தை என்ற உண்மை, லட்சுமிக்கு தெரிய வருகிறது.

BT : Lakshmi want to sleep in barathi house plans for that

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இதன் பிறகு, பாரதியை தந்தை என அழைக்காமலே அவருடன் நேரத்தை செலவிட லட்சுமி முடிவு செய்கிறார். தொடர்ந்து, ஹேமாவையும் தன்னுடைய தங்கச்சியாக லட்சுமி ஏற்றுக் கொள்கிறார். குழந்தைகள் இணைந்தது போல, விரைவில் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய இருவரும் இணைவார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அடுத்தடுத்து அசத்தல் 'ஐடியா'

இதனிடையே, பாரதியை தந்தை என அழைக்க வேண்டி, சூப்பரான ஐடியா ஒன்றை போட்டு, அதனை செயல்படுத்தவும் செய்தார் லட்சுமி. "உங்கள டாக்டர் அங்கிள்'ன்னு கூப்டுறது எனக்கு பிடிக்கல. நான் உங்கள டாக்டர் அப்பா ன்னு கூப்பிடவா?" என லட்சுமி கேட்க, பாரதியும் இதற்கு ஓகே சொல்கிறார். தந்தையை அப்பா என கூப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்த லட்சுமி, அதற்காக ஒரு திட்டம் போட்டு, வெற்றியும் கண்டுள்ளார்.

என்னம்மா ஆக்டிங் லட்சுமி இது

இந்நிலையில், பாரதியிடம் இன்னும் நெருக்கமாக லட்சுமி அடுத்து போட்டுள்ள பிளான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. பாரதியின் அறையில் தூங்குவது போல நடிக்கும் லட்சுமியை எழுப்ப பாரதி முயற்சி செய்கிறார். ஆனால், தான் நல்ல தூக்கத்தில் இருப்பது போல நடிக்கிறார் லட்சுமி.

BT : Lakshmi want to sleep in barathi house plans for that

பின்னர், கண்ணம்மாவும் 'லட்சுமி, லட்சுமி' என அழைக்க, குழந்தை லட்சுமியின் மனதுக்குள், "என் அப்பா யாருன்னு நீயும் சொல்லல. நானே தெரிஞ்சிக்கிட்டது அப்பறம், அவரு கூட தங்கவும் விடமாட்டேங்கிறியே மா. அப்பா'வ விட்டு, நான் வீட்டுக்கே வர மாட்டேன் மா" என நினைத்துக் கொள்கிறார். இன்னொரு பக்கம், கத்திய படி, லட்சுமியை அடித்துக் கொண்டே இருக்கிறார் கண்ணம்மா.

கண்ணம்மாவை திட்டும் பாரதி

ஆனால், பாரதியுடன் தான் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் லட்சுமி. கண்ணைக் கூட திறக்காமல், தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, கண்ணம்மாவை பார்த்து, "உனக்கு அறிவு இருக்கா?. ஏன் இப்டி குழந்தையை அழ வைக்குறே?" என கேட்கிறார். லட்சுமி எழுந்து இருந்தால் நீ அழைத்துச் சென்றிருக்கலாம் என்றும், தூக்கத்தில் இருக்கும் குழந்தையை நீ தான் அடித்து அழைத்து செல்ல பார்க்கிறாய் என்றும் பாரதி கேள்வி கேட்கிறார்.

BT : Lakshmi want to sleep in barathi house plans for that

மெல்ல மெல்ல, தந்தை பாரதியிடம் இன்னும் நெருக்கமாக லட்சுமி மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற்று வரும் நிலையில், இந்த முறை தூங்குவது போல நடித்து சாதித்த விஷயமும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பாராட்டினை பெற்று வருகிறது.

இந்திக்கு செல்லும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தயாரித்த மரண மாஸ் படம் இது தான்! சூப்பர் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

BT : Lakshmi want to sleep in barathi house plans for that

People looking for online information on Bharathi Kannamma, Bharathi kannamma promo, Bharathi Kannamma Serial, Bharathi Kannamma Serial Episode, Lakshmi, Vijay Television will find this news story useful.