VTK D Logo Top
Sinam D Logo Top
www.garudabazaar.com

Raju Vootla Party : பிக்பாஸ் போவாரா மன்சூர் அலிகான்...! அவரே சொன்ன பதில்.. ரசிகர்களின் வைரல் கமெண்ட்ஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் வெற்றி பெற்றார் ராஜூ. டைட்டில் வின்னரான ராஜூ, பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் ஜோடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி வருகிறார்.

Mansoor Ali Khan talks about bigg boss in Raju Vootla Party

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியான ராஜூ வூட்ல பார்ட்டி என்கிற நிகழ்ச்சி கலகலப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராஜூ மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்க, இந்த நிகழ்ச்சியில் வாரம் ஒரு தனி நபரோ, ஒரு குழுவோ சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர். இடையிடைலே ராமர், மதுரை முத்து காமெடிகளுடன் மிகவும் அமர்க்களமாக போகும் இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் தற்போது ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான், ஜாலியாக ஆடுகிறார், செட்டில் ஓடி ஆடி கலகலப்பை ஏற்படுத்துகிறார். இது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் நடிகர் மன்சூர் அலிகானிடம் பிரியங்கா, பிக்பாஸ்க்கு அழைத்தால் போவீர்களா? என கேட்கிறார். அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான், “சத்தியமா நான் அந்த ஷோ இதுவரைக்கும் பார்த்ததே இல்ல.. எத்தனை மணிக்கு வருது?” என்று கேட்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒவ்வொரு பிக்பாஸிலும் ஒரு 90ஸ் கிட் நடிகராவது இருப்பதை பார்க்க முடியும்.  இயக்குநர் சேரன், நடிகர் சரவணன் ஆகிய பலரும் பிக்பாஸில் இருந்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த பிக்பாஸில் 90ஸ் கிட் மத்தியில் வில்லன் நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் புகழ்பெற்ற மன்சூர் அலிகான் வந்தாலும் நல்லாதான் இருக்கும், தவிர அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை இதற்கு முன்பு கண்டிருக்கவில்லை எனும்போது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும் என கூறி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Mansoor Ali Khan talks about bigg boss in Raju Vootla Party

People looking for online information on Bigg Boss 5, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 5, Kamal Haasan, Mansoor ali khan, Raju Vootla Party, Vijay Television, Vijay tv will find this news story useful.