www.garudabazaar.com
iTechUS

"சொக்க வைக்கும் குரல்".. விடுதலை படத்தில் தனுஷ் பாடல்.. நன்றி சொல்லி சூரி ட்வீட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷிற்கு நன்றி தெரிவித்து சூரி பகிர்ந்துள்ள ட்வீட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Actor soori thank Dhanush for singing viduthalai movie song

Images are subject to © copyright to their respective owners.

Also Read | அமலாபால் தம்பியா இது?.. சகோதரர் பிறந்தநாளில் வேறலெவல் வீடியோவை வெளியிட்டு வாழ்த்து!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக அறியப்படுபவர் வெற்றிமாறன். இவர்  தற்போது 'விடுதலை' என்னும் படத்தை இயக்கி வருகிறார். எல்ட்ரெட் குமாரின் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாகவும் உருவாகி வருகிறது.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக கொண்டு தான் வெற்றிமாறன் இந்த விடுதலை படத்தினை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். அதே போல, ஜெயமோகன் இந்த படத்தில் எழுத்தாளராகவும் பணிபுரிகிறார்.

Actor soori thank Dhanush for singing viduthalai movie song

Images are subject to © copyright to their respective owners.

விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியது. இதனை தொடர்ந்து இன்று (பிப்ரவரி 8) முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் 'உன்னோடு நடந்தா' பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.

Actor soori thank Dhanush for singing viduthalai movie song

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கம் மூலமாக நடிகர் தனுஷிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். இது குறித்து சூரி எழுதியுள்ள அந்த பதிவில்,"சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சார்-க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார்" எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன் தனுஷ் பாடும் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Actor soori thank Dhanush for singing viduthalai movie song

Images are subject to © copyright to their respective owners.

இதனிடையே நடிகர் தனுஷ் சூரியின் இந்த பதிவில்,"லவ் யூ" என கமெண்ட் செய்திருக்கிறார். இந்நிலையில் பாடல் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

Also Read | சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த ஜெயிலர் பட பிரபலம்.. வைரல் போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Actor soori thank Dhanush for singing viduthalai movie song

People looking for online information on Dhanush, Soori, Viduthalai, Viduthalai movie song will find this news story useful.