Saaho : பிரபாஸின் அனல் பறக்கும் ஆக்ஷன் டிரைலர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 10, 2019 06:50 PM
‘பாகுபலி’ திரைப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள ‘சாஹோ’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் வெளியாகியுள்ளது.

சுஜீத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தின் பெரும்பாலான ஆக்ஷன் காட்சிகள் துபாய், அபுதாபி உள்ளிட்ட இடங்களிலும், காதல் காட்சிகள் ஆஸ்திரியாவிலும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இப்படம் ஆகஸ்ட் 30-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து உள்ளது. ஹாலிவுட்டிற்கு நிகராக சாஹோ படத்தில் இடம்பெற்றுள்ள ஆக்ஷன் காட்சிகள், கார் சேசிங் காட்சிகள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
‘பாகுபலி 2’ திரைப்படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
SAAHO : பிரபாஸின் அனல் பறக்கும் ஆக்ஷன் டிரைலர் இதோ வீடியோ