www.garudabazaar.com
iTechUS

"நீ உயரனும் என்பதே என் இலக்கு".. டைட்டில் வென்ற பின் மகனை சந்தித்த அசிம்.. உருக்கமான பதிவு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது முடிவடைந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன், மிகவும் அசத்தலான வரவேற்பை பெற்றுள்ளது.

Azeem pic with his son after bigg boss title winner

                                                  Image Credit : Vijay Television

Also Read | அதிர்ச்சி.! பிரபல தமிழ் நடிகர் & இயக்குனர் ராமதாஸ் மாரடைப்பால் மரணம்..

21 போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த நிலையில் ஒவ்வொரு எபிசோடும் மக்களிடையே சிறப்பான வரவேற்பையும் பெற்றிருந்தது.

அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து பல டாஸ்க்குகள், சண்டைகள், வாக்குவாதங்கள், கலகலப்பான விஷயங்கள் என நாள்தோறும் நிறைய விறுவிறுப்பான சம்பவங்களும் அரங்கேறிக் கொண்டே இருந்ததால் பெரிய அளவில் இந்த பிக் பாஸ் சீசன் ட்ரெண்டிங்கிலும் இருந்தது.

அதே போல, அனைத்து போட்டியாளர்களும் சிறப்பாக ஆடி இருந்ததால் எந்த போட்டியாளர் டைட்டில் வின்னர் ஆவார் என்ற எதிர்பார்ப்பும் பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து 21 போட்டியாளர்களில் இருந்து அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தனர்.

Azeem pic with his son after bigg boss title winner

Image Credit : Vijay Television

இதில் பல்வேறு கட்டத்திற்கு மத்தியில் அசிம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டிருந்தார். இரண்டாவது இடத்தை விக்ரமனும், மூன்றாவது இடத்தை ஷிவினும் பிடித்திருந்தனர். டைட்டில் வின்னரான அசிமை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பாராட்டி தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், டைட்டில் வின்னரான அசிம், தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் அதிக கவனம் பெற்று வருகிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த அசிம், தொடர்ந்து தனது மகனுக்காக ஆடுவதாக பல முறை குறிப்பிட்டு வந்தார். அதே போல, மகன் ரயானின் பிறந்தநாளன்று பிக் பாஸ் வீட்டில் இருந்த அசிம், வாழ்த்துக்களை தெரிவித்து கண் கலங்கி போயிருந்த நிலையில், நிச்சயம் டைட்டிலை வென்று உன்னை வந்து பார்ப்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

Azeem pic with his son after bigg boss title winner

Images are subject to © copyright to their respective owners.

அதனை நிஜமாக்கி தற்போது டைட்டிலும் வென்றுள்ள அசிம், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, தனது மகன் ரயானை நேரில் சந்தித்துள்ளார். பிக் பாஸ் கோப்பையை மகன் வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த அசிம், "எனது உயரம் உனது இலக்கல்ல…நீ உயரனும் என்பதே என் இலக்கு…! இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம், என் செல்லமே!. 105 நாட்கள் இந்த தருணத்திற்காக தான் காத்திருந்தேன்" என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல மற்றொரு ட்வீட்டில், மகனுடன் இருக்கும் மற்றொரு புகைப்படம் பகிர்ந்து, "இது போதும் எனக்கு இது போதுமே, வேறேன்ன வேணும் நீ போதுமே ♥️" என்றும் அசிம் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | விஜய் மக்கள் இயக்கத்தை பாராட்டிய கனடா நாட்டு பெண் மேயர்.. வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Azeem pic with his son after bigg boss title winner

People looking for online information on Azeem, Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss 6 Tamil Grand Finale, Bigg Boss Tamil will find this news story useful.