www.garudabazaar.com

தனா வெளிய போனதும் பாதிச்ச விஷயம்.. முதல் முறையாக ஷிவின் உடைத்த சீக்ரெட்!!.. அட, ஆமால்ல!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

Shivin about dhanalakshmi eviction to her friends bigg boss

Also Read | பலூன் ஊஞ்சலில் நிறைமாத கர்ப்பத்துடன் 'பாண்டவர் இல்லம்' நடிகை.. வைரலாகும் போட்டோ ஷூட்..

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர்.

இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனையடுத்து, இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர்.

Shivin about dhanalakshmi eviction to her friends bigg boss

மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். அதே போல, அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகளும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தர, ஷிவினின் நண்பர்களும் உள்ளே வந்திருந்தனர்.

ஷிவினின் தோழி மற்றும் அவரது வருங்கால கணவர் உள்ளே வந்தனர். அப்போது அவர்களை கட்டியணைத்து கண்ணீர் விட்ட ஷிவின், அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கவே இல்லை என்றும் வந்ததற்கு நன்றி என்றும்  தெரிவித்தார். ஷிவினின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் வரவில்லை என்ற சூழலில், தனது தாயிடம் சண்டை போட்டு தான் ஷிவினை பார்க்க வந்ததையும் அவரது தோழி உருக்கத்துடன் குறிப்பிட்டார். அதே போல, ஷிவினின் தாய் மற்றும் அக்காவிடம் பேசியதாகவும் ஆனால் அவர்கள் வரமாட்டோம் என தெரிவித்ததாகவும் அவரது தோழி கண்ணீருடன் தெரிவித்தார்.

Shivin about dhanalakshmi eviction to her friends bigg boss

இதனைத் தொடர்ந்து, சக போட்டியாளர்கள் குறித்தும், இன்னும் தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் அவர்கள் மூவரும் பேசிக் கொண்டே இருக்கின்றனர்.

அப்போது பேசும் ஷிவினின் நண்பர்கள், "இங்கே இருக்கும் அனைவரும் நன்கு தெரிந்த முகம். அவர்களுடன் நீ போட்டி போடுவது பெருமையாக இருக்கிறது. அது ரொம்ப பெரிய விஷயமாகவும் இருக்கு" என தெரிவிக்கின்றனர்.

Shivin about dhanalakshmi eviction to her friends bigg boss

தொடர்ந்து பேசும் ஷிவின், "அது தான் தனா போனதும் ரொம்ப Affect பண்ணிச்சு. ஏன்னா ரெண்டு பேரும் ஒரே Categoryல இருந்து வந்தவங்க. ஒரே கனவு, ஒரே எதிர்பார்ப்பு. அவளுக்கும் அவ அம்மா வரணும்னு இருந்துச்சு. நெறய விஷயத்துல அவ கூட என்ன கனெக்ட் பண்ணிக்க முடியும். அதுனால அவ போனது பாதிச்சுது" என கூறுகிறார்.

Shivin about dhanalakshmi eviction to her friends bigg boss

இதன் பின்னர் பேசும் ஷிவினின் தோழி, டிக்டாக் உள்ளிட்ட தளங்கள் மூலம் தனா சற்று தெரிந்த முகமாக இருந்ததாகவும், ஆனால் நீ அதிகம் தெரியாமல் இருந்து இந்த இடத்தில் இருப்பதையும் குறிப்பிட்டு பேசுகின்றனர். அதே போல, வெளியே இருப்பதை போல உள்ளேயும் ஷவின் இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.

Also Read | 25 லட்ச ரூபாய் கடன் வாங்கும் TTF வாசன்.. அவரே சொன்ன காரணம்.. வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

Shivin about dhanalakshmi eviction to her friends bigg boss

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Dhanalakshmi, Shivin, Shivin about dhanalakshmi eviction, Vijay Television, Vijay tv will find this news story useful.