www.garudabazaar.com

Bigg Boss 6 Tamil : "Ex பிக்பாஸ் போட்டியாளரை Copy அடிக்கிறாங்க ரச்சிதா"... அசீம் பரபரப்பு கருத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் பிக்பாஸ் 6 வது சீசன், தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி மட்டுமில்லாமல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்திலும் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டு களிக்க முடியும்.

azeem about rachitha saying she copied old biggboss contestant

இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்பற்றும் ரசிகர்கள் அதிகம் இருப்பதால், தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் நடப்பது பற்றியும், போட்டியாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் ஏராளமான கருத்துக்கள் கூட இணையத்தில் அதிகம் பேசு பொருளாக மாறி வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் காரணமாக, அடுத்தடுத்து விவாதங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள் போட்டியாளர்கள் இடையே உருவாகி வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் ரேங்க் டாஸ்க் பெயரில், பல போட்டியாளர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்ட விஷயம், பிக்பாஸ் வீட்டை ரெண்டாக பிளந்துள்ளது. இந்த டாஸ்க்கில் சக போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொருவரும் வெளிப்படையாக சொல்லும் கருத்தும், சிறைக்கு போட்டியாளர்களை அனுப்புவது போல உள்ள சுற்றும் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டில் சண்டையை உருவாக்கி உள்ளது.

azeem about rachitha saying she copied old biggboss contestant

சமீபத்தில், ஆயிஷாவை பார்த்து வாடி போடி என அசீம் பேசிய விஷயங்களும், இதற்கு ஆயிஷா செருப்பை கழற்ற முயற்சி செய்ததும் என அடுத்தடுத்து இருவரும் மோதிக் கொண்ட விஷயங்கள், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதன் பின்னர், விக்ரமன், ராம், கதிரவன் உள்ளிட்ட போட்டியாளர்களும் சில கருத்துக்களை பேச இதுவரை இல்லாத அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் குழப்பங்கள் உருவாகி உள்ளது.

இதனால், நிச்சயம் வார இறுதியில் கமல் வரும் போது இதில் பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டு இன்னும் விறுவிறுப்பை அதிகரிக்கும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

azeem about rachitha saying she copied old biggboss contestant

இந்த நிலையில், ரச்சிதா குறித்து ADKவிடம் அசீம் சொல்லும் கருத்துக்கள் தொடர்பான வீடியோ, அதிகம் வைரலாகி வருகிறது. "நான் ரச்சிதாவிடம் 'நீங்கள் கேமரா அருகே சென்று கொஞ்சுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை' என்று நான் கூறினேன். ஏதாவது இருந்தா, அவங்களே போய் கேமரா முன்னாடி பேசிப்பாங்க. இதற்கு முந்தைய பிக்பாஸ் சீசன்களில், ஒரு பொண்ணோ பையனோ கேமரா முன்னாடி பேசி அதுல அவங்க ரொம்ப ஃபேமஸ் ஆகி இருப்பாங்க.

அதை ரச்சிதாவும் எடுத்துக் கொண்டு செய்கிறார்கள் என நான் வெளிப்படையாக தான் சொன்னேன். இதற்கு முந்தைய சீசனில் ஒரு பெண் இப்படி தான் செய்தார். அது யார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட நான் விரும்பவில்லை. அப்படி செய்து அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவானது. அதை அப்படியே ரச்சிதா இங்கு காப்பி அடிப்பது போல எனக்கு தெரிந்தது. அதை நான் வெளிப்படையாக சொன்னேன்" என குறிப்பிட்டுள்ளார்.

azeem about rachitha saying she copied old biggboss contestant

முந்தைய சீசனில் உள்ள பெண் போட்டியாளர் பற்றி அசீம் பேசி உள்ளதால், அது யார் என்பது குறித்து பிக்பாஸ் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

azeem about rachitha saying she copied old biggboss contestant

People looking for online information on Azeem, BB6 Tamil, Biggboss 6 Tamil, Rachitha Mahalakshmi will find this news story useful.