''உண்மைகள் சில நேரம் கசக்கதான் செய்யும்'' - மாஸ்டர் பிரபலத்துக்கு ப்ரியா அட்லி கொடுத்த ரிப்ளை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அட்லியின் மனைவி ப்ரியா, மாஸ்டர் கோ ப்ரொட்யூசருக்கு செம ரிப்ளை கொடுத்துள்ளார். 

அட்லியின் மனைவி ப்ரியா இன்ஸ்டாகிராம் ரிப்ளை | atlee's wife priya replies to vijay's master co producer jagadish

தமிழ் சினிமாவில் ராஜாராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அட்லி. இதையடுத்து இவர் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தார். இருவரின் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல், பிகில் மூன்று படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து அட்லி தனது A for Apple Productions சார்பாக தயாரிக்கவுள்ள படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அட்லியின் இந்த புதுப்பட அறிவிப்பை, விஜய்யின் மாஸ்டர் படத்தின் கோ-ப்ரொட்யூசர் ஜகதிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்தார். அதற்கு அட்லியின் மனைவி ப்ரியா, ''நீங்கள் இல்லாமல் எதுவும் நடந்திருக்காது'' என ரிப்ளை கொடுக்க, ''ரொம்ப சந்தோஷம், ஆனா அப்படிலாம் இல்ல' என ஜகதிஷ் ரிப்ளை அடித்தார். இதை பார்த்த ப்ரியா, ''உண்மைகள் சில நேரம் கசக்கதான் செய்யும் பிரதர்'' என ஜாலியா கமன்ட் அடித்திருக்கிறார். 

 

Entertainment sub editor