அன்றும் என்றும் இன்றும்.. இதுதான் பார்த்திபனின் ஜோடி - ப்ளாஷ்பேக் போட்டோவை பகிர்ந்தார்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் பார்த்திபன் தனது இளமைக்கால புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் பார்த்திபன். இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் இவர் கலக்கி வருகிறார். குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், ஒத்த செருப்பு உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. இவர் தற்போது இரவின் நிழல் எனும் படத்தை உருவாக்கும் பணியில் இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தனது இளமைக்கால புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர், ''அன்றும் இன்றுமென் சிந்தனைக்குள் சினிமா/மாற்று சினிமா/கலை/கவிதை, இதைத் தவிற வேறு இல்லை! அதே கவனம்/தீவிரம்/வீரியம் செய்யும் காரியத்திலும் உள்ளது! தனிமை எனக்கில்லை! என்றும் ஜோடியாகவே ஜாலியாகவே அதே ஜோலியாகவே பயனிக்கிறோம். நானும்.... சினிமாவும்!!!'' என அவர் பதிவிட்டுள்ளார்.