ரொம்பவே எமோஷனல் படம் இது! பொன்மகள் வந்தாள் படத்தை பாராட்டித் தள்ளும் பிரபல இயக்குனர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் அமேஸான் பிரைம் தளத்தில் நாளை ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பிரிமியர் ஷோவை பார்த்த இயக்குனர் அட்லி தன் கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

atlee tweets about Jyothika starrer Ponmagal Vanthal

அவர் படத்தைப் பற்றி கூறுகையில் "வலுவான மெசேஜ், எமோஷனலான காட்சிகள் உள்ள படம். இயக்குனருக்கு வாழ்த்துகள்’’ என்று பதிவிட்டு படக்குழுவினரையும் டேக் செய்துள்ளார் அட்லி.

நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடித்திருக்கும் படம்தான் 'பொன்மகள் வந்தாள்'. இந்த படத்தை இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கியுள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் பொன்மகள் வந்தாள் படம் OTT எனப்படும் ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது.

அறிவித்த நாள் முதல் பல சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பியது. ஆனாலும் தன் முடிவில் உறுதியாக இருந்த சூர்யா படத்தை OTT-யில் ரிலீஸ் செய்வது நிச்சயம் என்று முடிவெடுத்தார். இதனையடுத்து படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

தற்போது இந்தப் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்

.

 

atlee tweets about Jyothika starrer Ponmagal Vanthal

People looking for online information on Atlee Kumar, Jyothika, Pon Magal Vanthaal will find this news story useful.