தளபதி விஜய்யின் குஷி குறித்து வெளியான மீம் - எஸ்.ஜே.சூர்யாவின் ரியாக்சன் என்ன தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வாலி' படத்துக்கு பிறகு தனது இரண்டாவது படமாக எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படம் 'குஷி'. தளபதி விஜய் - ஜோதிகா இணைந்து நடித்த இந்த படம் நேற்றுடன் (19/05/2020) 20 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இதனையடுத்து இந்த படம் குறித்து ரசிகர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து வந்தனர்.

இந்த படத்தின் துவக்கத்திலேயே படத்தின் விஜய், ஜோதிகாவை அறிமுகப்படுத்தி, 'இவங்க ரெண்டு பேரும் வாழ்வில் இணைய போகிறார்கள். ஆனால் அது எப்படி?' என்பது தான் இந்த படத்தின் கதை' என்பார்.  படத்தின் துவக்கத்திலேயே கதையையும் முடிவையும் சொல்லிவிட்டு தனது சுவாரஸியமான திரைக்கதையால் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்திருப்பார். அதுதான் இந்த படம் இன்றளவும் கொண்டாடப்படுவதற்கு காரணம்.

இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த மீமில் 'சாமி' பட காமெடி காட்சி ஒன்றில், டிராஃபிக் போலீஸிடம் விவேக், 'வண்டில உட்காருங்க 7 போட்டுக்காட்டுறேன்' என்பார். அந்த காட்சியை மாற்றி, ஒரு ஹீரோவும் ஹீரோயினும் ஒன்னு சேருவது தான் கதை என்று தயாரிப்பாளரிடம் சொல்வது போலவும், அதற்கு இதை எப்படி படமாக எடுப்ப ? என்று தயாரிப்பாளர் கேட்க, உட்காரும் ஓய் எடுத்துக்காட்டுறேன் என்று சொல்வது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது.

Entertainment sub editor