பொன்மகள் வந்தாள் : டிரெய்லருக்கே டிரெய்லர் வெளியிட்ட நடிகர் சூர்யா... படம் அதை பற்றியா...?
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க இப்போதைக்கு ஒரே வழி சமூக இடைவெளியை பின்பற்றுவது தான். இதனால் திரைத்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. பல படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

அதே போல் நடிகை ஜோதிகா நடிப்பில், சூர்யா தயாரிப்பில் உருவான படம் "பொன்மகள் வந்தாள்". இந்த படம் OTT ஆன்லைன் தளங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இருந்தும் எதற்கும் சலிக்காத படக்குழுவினர் உறுதியாக இருந்தனர். இந்நிலையில் படத்தில் டிரெய்லர் நாளை ரிலீஸ் ஆகா இருக்கிறது. அதற்கு முன்பு அதில் ஒரு பகுதியை நடிகர் சூர்யா வெளியிட்டார். இதை பார்த்தல் படம் சிறுமிகள் தொடர் கொலை பற்றி இருக்குமோ என்ற தோன்றுகிறது. நீங்களே பாருங்கள்...
Judgement Loading...#PonmagalVandhal trailer #PonmagalVandhalOnPrime #Jyotika @fredrickjj @rparthiepan @ppothen @actorthiagaraja @rajsekarpandian @govind_vasantha @2D_ENTPVTLTD @SonyMusicSouth @PrimeVideoIN pic.twitter.com/ZMQUx3gYGV
— Suriya Sivakumar (@Suriya_offl) May 20, 2020