வடிவேலு மீம் போட்டு ரசிகர் கேட்ட கேள்விக்கு 'டாக்டர்' டீம் கொடுத்த பன்ச் பதில்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹீரோ படத்துக்குப் பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டாக்டர்.  கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே. ப்ரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கின்றன. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இயக்குனர் கோலமாவு கோகிலா புகழ் நெல்சன். பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக அறிமுகமாகும் இப்படத்தில் வினய், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

KJR Studios tweets Sivakarthigeyan next movie Doctor updates

சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில்தான் கொரானா ஊரடங்கால் படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் வடிவேல் GIF இமேஜ் ஒன்றை ஷேர் செய்து அதில், ‘டாக்டர் அப்டேட் தாடா’ என்று பதிவிட்டுள்ளார். இதற்கான பதிலை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ட்வீட் செய்துள்ளனர். அதில், ‘அப்டேட் கேட்கறது ஈஸி..கொடுக்கறதுதான் கஷ்டம். லாக்டவுன் முடிந்தால்தான் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க முடியும். லாக்டவுன் முடிஞ்சதும் அப்டேட் அள்ளும் பாருங்க’ என்று பதிவிட்டுள்ளனர். அதுவரை வீட்டில் இருங்கள். பத்திரமாக இருங்கள். ப்ரைம் வீடியோவில் ஹீரோ படத்தை பார்த்து ரசியுங்கள்’ என்று பன்ச் டயலாக் போல பதில் அளித்துள்ளனர். 

தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், லாக்டவுன் முடிந்ததும் படத்தை  விரைவாக முடித்துவிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

KJR Studios tweets Sivakarthigeyan next movie Doctor updates

People looking for online information on Corona Virus, Covid 19, Lockdown, Shooting, Sivakarthikeyan, Vadivelu will find this news story useful.