www.garudabazaar.com

‘டாணாக்காரன்’ பட இயக்குநரை பாத்துருக்கீங்களா?.. ‘அசுரன்’ படத்தில் மிரட்டலா வருவாரே! trending teaser!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘டாணாக்காரன்’.

Asuran actor thamizh directed taanakaran vikram prabhu teaser

விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால், எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தில் விக்ரம் பிரபு போலீஸ்காரர் ஆக வேண்டும் என்கிற வேட்கையில் தீவிரமாக பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய, டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

Asuran actor thamizh directed taanakaran vikram prabhu teaser

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இந்த படத்தை potential Studios சார்பில் தயாரித்து இருக்கின்றனர். இந்த திரைப்படத்தினை இயக்குநர் தமிழ் எழுதி இயக்கியிருக்கிறார்.

Asuran actor thamizh directed taanakaran vikram prabhu teaser

இயக்குனர் தமிழ் நமக்கு அறிமுகம் இல்லாதவர் அல்ல. ஆம், இந்த படத்தின் இயக்குநர் தமிழ், தனுஷின் ‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் திரைப்படத்தில், மகனை காப்பாற்றுவதற்கு ஒரு பொட்டல் வெளியில் தனுஷ் (சிவசாமி) சிலருடன் சண்டை போடுவார்.

Asuran actor thamizh directed taanakaran vikram prabhu teaser

அப்போது தனுஷையும், அவருடைய மகனையும் துரத்தி, சுற்றிவளைக்க சிலர் வருவார்கள். அவர்களில் முதன்மையானவர் தான் தமிழ். ஈட்டியை பிடித்துக்கொண்டு செம்ம மாஸாக அந்த காட்சிகளில் தனுஷை சுற்றி வளைக்கும் தமிழ்-தான் ‘டாணாக்காரன்’ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இதனிடையே இந்த திரைப்படத்தின் டீசர் யூடியூபில் வெளியாகி, ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள மகிழ்ச்சியான செய்தியையும் படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர். தொடர்ந்து திரைப்பட வெளியீடு குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: நிஜ வாழ்க்கை 'பாரதி கண்ணம்மா'.. கணவரை பிரிந்து 46 ஆண்டுகள் பெண்ணின் போராட்டம்! கஸ்தூரி உருக்கம்!

தொடர்புடைய இணைப்புகள்

Asuran actor thamizh directed taanakaran vikram prabhu teaser

People looking for online information on Asuran, Dhanush, Taanakaran, Thamizh, Vikram Prabhu will find this news story useful.