www.garudabazaar.com

'தனுஷின் 'D43' படத்தின் 'மாஸ்' அப்டேட், 'இப்படி ஒரு ஸ்பெஷல் நாளில்' கிடைக்குமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் நடிகர் தனுஷை, அவரது அண்மை படங்களான 'கர்ணன்' படத்திலும், 'ஜகமே தந்திரம்' படத்திலும் கண்டோம்.

dhanush d43 first look release update what we know

இந்நிலையில் கார்த்திக் நரேனின் இயக்கத்தில்,  தனுஷின் வரவிருக்கும் படமான, பெயர் சூட்டப்படாத ‘D43’ (Dhanush43) திரைப்படம் சத்ய ஜோதி பிலிம்ஸால் தயாரிக்கப்படுகிறது.  இப்படத்தில், 'மாஸ்டர்' பட ஹீரோயின் மாளவிகா மோகனன் முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

dhanush d43 first look release update what we know

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படம் பக்கா கமர்ஷியல் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெற்றிமாறன் இயக்கத்திலான ஆடுகளம், அசுரன் திரைப்படங்களில் தனுஷ்க்கு ஜி.வியின் இசை பெருமளவில் கை கொடுத்தது.

dhanush d43 first look release update what we know

இந்நிலையில் தனுஷின் பிறந்த நாள் வரும் இந்த மாதத்தில், D43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.  அப்படி ஜூலை மாத இறுதிக்குள், D43 திரைப்படத்தின் Fisrt Look வந்து சேர்ந்தால் ரசிகர்களின் குஷிக்கும் கொண்டாட்டத்துக்கும் நிச்சயம் அர்த்தம் கிடைத்துவிடும். எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்க காத்திருப்போம்.

ALSO READ: "Guitar கம்பி மேலே நின்று"னு பெயர் வெச்சது இப்படிதான்! 'நவரசா' சீக்ரெட்ஸ் உடைக்கும் GVM .. Exclusive Interview!

dhanush d43 first look release update what we know

People looking for online information on D43, Dhanush, Dhanush43, GV Prakash Kumar, Karthick Naren will find this news story useful.