www.garudabazaar.com

"சூப்பர்.. இந்த டைட்டில்ல படமா?!".. தனுஷ் பகிர்ந்த ‘புதிய’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய பிரபலமான புத்தகம் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.

ashok selvan manikandan movie FL dhanush tweet

இந்த தலைப்பில் படம் பண்ணுவது பல இயக்குநர்களுக்கு பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த தலைப்புக்கேற்ற கதை அமைய வேண்டும் என்று காத்திருப்பார்கள். இன்னும் சிலர் இந்த தலைப்பு ஜனரஞ்சகமாக ரீச் ஆகுமா என்கிற சந்தேகத்தில் தயங்கியதும் உண்டு.

இந்நிலையில் இந்த தலைப்பில் உருவாகும் படம் பற்றி நடிகர் கமல்ஹாசன் தகவல் பகிர்ந்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "AR Entertainment தயாரிப்பில்,Trident Arts வழங்கும் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' எனும் புதிய திரைப்படத்தை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். இத்திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என  குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தமது ட்விட்டர் பக்கத்தில் இதனை பகிர்ந்துள்ளார்.

அஷோக் செல்வன், மணிகண்டன், நாசர் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்தை விஷால் வெங்கட் இயக்குகிறார். ரதன் இசையமைக்கிறார். சில்லுக்கருப்பட்டி, ஏலே படங்களில் நடித்தவரும், ‘விக்ரம் வேதா’ படத்திற்கு வசனம் எழுதியவருமான மணிகண்டன் இந்த படத்துக்கு வசனங்களை எழுதுகிறார்.

ALSO READ: பொண்ணா? பேயா?”.. அஷோக் செல்வன் - ப்ரியா பவானி ஷங்கரின் 'ஹாஸ்டல்'.. வெளியான ரகளையான Teaser!

தொடர்புடைய இணைப்புகள்

ashok selvan manikandan movie FL dhanush tweet

People looking for online information on Ashok Selvan, Manikandan, SilaNerangalilSilaManidhargal, Trident Arts will find this news story useful.