பாரதிராஜா ரிட்டர்னஸ் - இந்த முறை வேற கலர்.. வேற ஸ்டைல்! தனுஷ் வெளியிட்ட ட்ரெய்லர் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாராதிராஜாவின் மீண்டும் ஒரு மரியாதை படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

dhanush releases barathi raja's new movie trailer

தமிழ்சினிமாவில் லெஜன்ட்ரி இயக்குநராக கொண்டாடப்படுபவர் பாரதிராஜா. ரஜினி, கமலை வைத்து இவர் பல படங்கள் ஹிட் கொடுத்திருக்கிறார். இயக்கத்தை தாண்டி நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்ட பாரதிராஜா பல படங்களில் நடித்தும் வந்தார். பாண்டிய நாடு, கென்னடி க்ளப் உள்ளிட்ட படங்களில் பாரதிராஜாவின் நடிப்பு பெறுமளவு பேசப்பட்டது.

இந்நிலையில் பாரதிராஜாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் மீண்டும் ஒரு மரியாதை. இப்படத்தின் ட்ரெய்லர் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் இதை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கிராமத்து படங்களை இயக்குவதில் தேர்ந்தவரான பாரதிராஜா இந்த முறை வேறு ஸ்டைலில் இப்படத்தை இயக்கியுள்ளார். த்ரில்லர் ஜானரில் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

பாரதிராஜா ரிட்டர்னஸ் - இந்த முறை வேற கலர்.. வேற ஸ்டைல்! தனுஷ் வெளியிட்ட ட்ரெய்லர் இதோ. வீடியோ

Entertainment sub editor