Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

பிரபல இயக்குனருடன் இணையும் ஆர்யா... எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வித்தியாசமான காம்போ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது அசாத்திய படைப்புகளால் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து நிற்பவர் இயக்குனர் நலன் குமாரசாமி. விஜய் சேதுபதி நடிப்பில் இவர் இயக்கிய சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்கள் இன்றும் பலரது பேவரைட் படங்கள். அதேபோல் இவர் நடித்த ஜிகர்தண்டா, பிட்சா, எனக்குள் ஒருவன் போன்ற படங்களும் மிகப் பெரிய ஹிட் அடித்தன. புகழ்பெற்ற சூப்பர் டீலக்ஸ் படத்தின் எழுத்தாளரும் இவர்தான். இந்நிலையில் இயக்குனர் நளன் குமாரசாமியின் அடுத்த படத்தில் ஆர்யா நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

actor arya next with this popular director பிரபல இயக்குனருடன் இணையும் ஆர்யா

மேலும் இந்த படம் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுக்கு ஒரு பாராட்டு தரும் விதமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இந்த பாடத்தை தயாரிக்க இருக்கின்றனர். ஆர்யாவின் கஜினிகாந்த் மற்றும் அவரின் அடுத்து வரவிருக்கும் 'டெட்டி திரைப்படத்தையும் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தான் தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த வரிசையில் இது மூன்றாவது திரைப்படமாகும். இந்நிலையில் சீக்கிரமே ஆர்யா நடிக்கும் இந்த படத்தின் தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. நளன் கடைசியாக இயக்கிய படம் 'ஆடல் பாடல்', சமீபத்தில் வெளியான குட்டி ஸ்டோரி படத்தில் வெளியான நான்கு பகுதிகளில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Arya

தொடர்புடைய இணைப்புகள்

actor arya next with this popular director பிரபல இயக்குனருடன் இணையும் ஆர்யா

People looking for online information on Arya will find this news story useful.