www.garudabazaar.com
www.garudabazaar.com

“ரிலீஸ்க்கு ஏதாவது ப்ளான் வெச்சிருக்கியா?” - ஆர்யாவின் ‘டெடி’ திரைப்பட அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்தன.

Arya Teddy Trailer Update ஆர்யா சாயிஷா நடிக்கும் டெடி

இதனை அடுத்து சமுத்திரக்கனி நடித்த ‘ஏலே’ படம் திரையரங்குகளில் வெளியாக இருந்த சூழலில், 30 நாட்களுக்கு பிறகே இப்படத்தை OTT-யில் வெளியிடுவோம் என்கிற உறுதிமொழியை தயாரிப்பாளர் கொடுக்க மறுத்ததால் அந்த திரையரங்கு உரிமையாளர்கள் அப்படத்தை தியேட்டர்களில் வெளியிட மறுத்து விட்டனர். எனவே இப்படம் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா நடித்துள்ள டெடி படம் ஓ.டி.டி.யில் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு கிளிம்ப்ஸை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்யா. அதில், “ரிலீஸ்க்கு ஏதாவது ப்ளான் வெச்சிருக்கியா?” என ஆர்யா கேட்கிறார். அதற்கு டெடி ஒன்று “ப்ளானா?” என கேட்கிறது. 

இப்படம் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் மார்ச்12-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லரும் பிப்ரவரி 23-ஆம்  தேதி வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: 'வெள்ளத்தில் உயிரிழந்த தந்தை!'.. தவித்த 4 பெண் குழந்தைகள்.. சோனுவின் நெகிழ்ச்சி செயல்!

தொடர்புடைய இணைப்புகள்

Arya Teddy Trailer Update ஆர்யா சாயிஷா நடிக்கும் டெடி

People looking for online information on Arya, Disney, OTTRelease, Teddy will find this news story useful.