www.garudabazaar.com

அதிர்ச்சி!! 1400 பாடல்களை எழுதிய கவிஞர் மரணம்! சோகத்தில் கேரள திரைத்துறை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா பாதித்ததை அடுத்து பிரபல மலையாள திரைப்பட பாடலாசிரியர் பூவாச்சல் காதர் காலமானார். அவருக்கு வயது 73.

lyricist of 1400 malayalam songs Poovachal Khader dies of covid

இந்தியாவில் பெருகிவரும் கொரோனாவால் பல திரை கலைஞர்கள் மரணம் அடைந்திருக்கும் செய்தி சோகத்தை அளித்திருக்கிறது. குறிப்பாக இந்த வருடம் தென்னிந்திய திரை துறையில் மிக முக்கியமான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தொடங்கி நகைச்சுவை நடிகர்கள் விவேக், பாண்டு வரை பலரும் மரணமடைந்தனர். இயக்குநர்களை பொறுத்தவரை எஸ்.பி.ஜனநாதன், தாமிரா, கே.வி.ஆனந்த் உள்ளிட்டோர் கொரோனா மற்றும் வெவ்வேறு காரணங்களால் மரணம் அடைந்தனர்.

இந்த நிலையில்தான் 1970 மற்றும் 80 ஆண்டுகளில் மலையாள சினிமாவில் கோலோச்சிய கவிஞர் மற்றும் பாடலாசிரியர் பூவாச்சல் காதர் கொரோனா பாதித்து பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த பின்னர் உடல்நிலை பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயர்ந்திருக்கிறார்.

தன்னுடைய காதல் மெலடி பாடல்களால் மலையாள ரசிகர்களை கட்டிப்போட்ட  பூவாச்சல் காதர் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். முன்னதாக கொரோனா தொற்றால் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பூவாச்சல் காதர், அதிலிருந்து குணம் அடைந்தார்.

lyricist of 1400 malayalam songs Poovachal Khader dies of covid

ஆனால் அதன் பின்னர் அவருடைய உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாகவும் அதற்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்த போது மாரடைப்பால் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இவருடைய மறைவுக்கு மலையாள திரை உலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது. இதனிடையே பூவாச்சல் காதரின் இழப்பு இலக்கிய உலகுக்கு மிகப் பெரிய இழப்பு என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

lyricist of 1400 malayalam songs Poovachal Khader dies of covid

People looking for online information on Covid19India, Poovachal Khader will find this news story useful.