www.garudabazaar.com

சர்தார் வெற்றி.. இயக்குனர் மித்ரனுக்கு பரிசளித்த விலையுயர்ந்த கார்.. அப்படி என்ன ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் கார்த்தியின் 22வது படமான 'சர்தார்' படம் தீபாவளியை முன்னிட்டு  அக்டோபர் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Sardar Producer presented a Toyota Fortuner car to Director Ps mithran

Also Read | தொழில் அதிபரை மணக்கும் நடிகை ஹன்சிகா.. ராஜஸ்தான் அரண்மனையில் திருமணம்! எப்போ? முழு விவரம்

இந்தப் படத்தை இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் இயக்கியுள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடித்துள்ளனர். நடிகை லைலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Sardar Producer presented a Toyota Fortuner car to Director Ps mithran

  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி திரையரங்குகளில் ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த படம் இரண்டாவது வாரத்தை வெற்றிகரமாக எட்டியுள்ளது. முதல் வாரத்தில் 380 திரைகளில் வெளியான இந்த படம், இரண்டாவது வாரத்தில் 500 திரைகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Sardar Producer presented a Toyota Fortuner car to Director Ps mithran

இச்சூழலில்  இயக்குனர் P.S.மித்ரனுக்கு   தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ்  S.லக்ஷ்மன்குமார் டொயோட்டடா ஃபார்ச்சூனர் கார் ஒன்றை பரிசளித்துள்ளார். நடிகர் கார்த்தி இந்த பரிசினை இயக்குனருக்கு வழங்கினார். இந்த காரின் விலை 32 லட்சம் ரூபாய் முதல் 51 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்த கார் 2694 - 2755 சிசி இன்ஜின் கொண்டது. மேலும் பெட்ரோல் & டீசல் என இரண்டு வகைகளில் இந்த கார் கிடைக்கிறது. லிட்டருக்கு 10 - 14 கிலோ மீட்டர் மைலேஜ் தரவல்லது. 7 பேர் அமரக்கூடிய வகையில் இந்த கார் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. டிரைவர் & பேசஞ்சர் ஏர் பேக் வசதியுடன் இந்த கார் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.‌ இந்த காரில் Anti Lock பிரேக்கிங் சிஸ்டம் வசதியும் உண்டு.

Sardar Producer presented a Toyota Fortuner car to Director Ps mithran

சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read | கடற்கரையில் விளையாடும் நடிகை அசினின் மகள்.. அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Sardar Producer presented a Toyota Fortuner car to Director Ps mithran

People looking for online information on Karthi, PS Mithran, Sardar, Sardar Producer, Toyota Fortuner car will find this news story useful.