www.garudabazaar.com

கடற்கரையில் விளையாடும் நடிகை அசினின் மகள்.. அவரே பகிர்ந்த வைரல் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடற்கரை மணலில் தனது மகள் விளையாடும் புகைப்படங்களை நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Actress Asin Shared Her Daughter Arin Latest Photo

Also Read | ஜெய் பீம் படத்தின் ஒர் ஆண்டு நிறைவு.. சந்துரு கதாபாத்திரம் குறித்து நெகிழ்ந்த சூர்யா!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் அசின். குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக பல படங்களில் அசின் நடித்துள்ளார்.

கமல்ஹாசன், அஜித்குமார், விஜய், சூர்யா, பாலகிருஷ்ணா, ஜெயம் ரவி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து அசத்திய, இவர் தமிழ் சினிமாவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மேலும் பாலிவுட் படங்களிலும் நடித்து திரைத்துறையை கலக்கி வந்தார் அசின். குறிப்பாக ஆமிர் கான், சல்மான் கானுடன் இணைந்து பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக தமிழில் நடிகர் விஜய்யின் காவலன் படத்தில் நடித்து இருந்தார்.

Actress Asin Shared Her Daughter Arin Latest Photo

கஜினி படத்தின் மூலம் பாலிவுட்டில் ஹீரோயினாக பிரபலமான நடிகை அசின், பின்னர் London Dreams, Housefull 2, Khiladi 786 ஆகிய பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து இவர் 2016ல் தொழிலதிபர் மைக்ரோ மேக்ஸ் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருக்கும் அசின் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது ஒரிரு பதிவுகளை பதிவிடுவார்.

Actress Asin Shared Her Daughter Arin Latest Photo

சமீபத்தில் நடிகை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் அரினின் 5-வது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வுகளின் புகைப்படத்தை பகிர்ந்து மகளை வாழ்த்தி இருந்தார்.  இந்நிலையில் தனது மகள் அரின் கடற்கரை மணலில் தனது தோழிகளுடன் விளையாடும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Also Read | தொழில் அதிபரை மணக்கும் நடிகை ஹன்சிகா.. ராஜஸ்தான் அரண்மனையில் திருமணம்! எப்போ? முழு விவரம்

Actress Asin Shared Her Daughter Arin Latest Photo

People looking for online information on Asin, Asin Daughter, Asin Shared Her Daughter photos will find this news story useful.