தளபதியின் மாஸ்டர் Audio Launch : பிரபலம் சொன்ன Kutty Story - ''அப்போ ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மாஸ்டர்' பட இசை வெளியீட்டு விழா தற்போது துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கருப்பு கோட் அணிந்து செம ஸ்டைலாக விஜய் கலந்து கொண்டுள்ளார். 'மாஸ்டர்' பட பிரபலங்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா சந்திரசேகர் மற்றும் தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனராம். விழாவில் தளபதி விஜய்யின் குட்டிக் கதையை கேட்க ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் குட்டி ஸ்டோரி பாடலை எழுதிய இயக்குநர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பண்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ''சார் கிட்ட இருந்து கால் வந்துச்சு. டியூன் அனுப்புனாங்க.

லிரிக்ஸ் சப்மிட் பண்ண போறப்போ, வர வழியில் கார் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு டிரைவர் தூங்கிட்டாரு. ஆனா யாருக்கும் எதும் ஆகல வண்டிய டோ பண்ணி அது நான் ஏறிட்டு வந்தேன். பாட்ட போட்டு கேட்டுட்டு வந்தேன். அதான் லைஃப் வெறி ஷார்ட் நண்பா, ஆல்வேய்ஸ் பீ ஹேப்பி'' என்று தெரிவித்தார்.

Entertainment sub editor