மாஸ்டர் ஆடியோ லான்ச் : தளபதி விஜய் உடன் வந்த குடும்ப உறுப்பினர்கள், மேடையில் நெகிழ்ச்சி..!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் இன்று (15.03.2020) நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சி சென்னை லீலா பேலஸில் துவங்கியுள்ளது. தளபதி ரசிகர்கள் பலரும் விஜய் இன்று என்ன உடையில் வருவார், என்ன பேச போகிறார் என்று மிகவும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் அவரது தந்தை, தாயான திரு எஸ்.ஏ.சி மற்றும் ஷோபா தம்பதியினர் மற்றும் அவரது மனைவி சங்கீதா இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர். அதுவும் இல்லாமல் மேடையில் தளபதி அவர்களை பாசமாக கட்டிப்பிடிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இபப்டி ஆரம்பமே அமர்க்களமாய் இருக்கும் போது, முழு நிகழ்ச்சி ரசிங்கர்களுக்கு செம ட்ரீட் ஆக இருக்க போகிறது என்பதை எந்த சந்தேகமும் இல்லை.