'Simple ஹீரோ’ஸ்..!' - வைரலாகும் ‘அக்னி சிறகுகள்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 19, 2019 11:14 AM
நடிகர்கள் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் ‘அக்னி சிறகுகள்’ படப்பிடிப்பின் போது எளிமையாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

‘மூடர் கூடம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் நவீன் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அக்னி சிறகுகள்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். டபுள் ஹீரோ கதையம்சம் கொண்ட இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும், அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், ஷூட்டிங்கிற்கு நடுவே உணவருந்தும் போது, ஹீரோக்கள் அருண் விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்டோருடன் படக்குழுவினர் தரையில் அமர்ந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. கஜகஸ்தானில் படமாக்கப்படும் முதல் இந்திய திரைப்படம் அக்னி சிறகுகள் என்பது குறிப்பிடத்தக்கது.