‘9 மாத கடின உழைப்பு.. ஆனா..’-பர்ஸ்ட் லுக் ரிலீசானதன் பின்னணி சொல்லும் ‘பாக்ஸர்’ ஹீரோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாக்ஸர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்னறிவிப்பின்றி வெளிவந்தது.

Arun Vijay tweet About sudden launch of Boxer’s first look...

எக்ஸெக்ட்ரா என்டேர்டைன்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கிறார். பாலாவின் அசோசியேட் ஆக இருந்த விவேக் எழுதி இயக்குகிறார் ஒளிப்பதிவாளராக லண்டனை சேர்ந்த மார்கஸ் பணியாற்றுகிறார் எடிட்டராக மதன். இசை டி இமான். இப்படத்தில் ரித்திகா சிங், மீரா என்கிற வேடத்தில் அருண் விஜய் ஜோடியாக நடிக்கிறார்.

வியட்நாமில் பாக்ஸிங், மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்ச்சியில் ஈடுபட்டதும் நாம் அறிந்ததே. சமீபத்தில் பட பூஜையில் உடம்பு முழுக்க டாட்டூ, குடுமி என அசத்தினார்.

பாக்ஸர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்னறிவிப்பின்றி வெளிவந்தது. அதை பார்த்து தானே அதிர்ச்சியாகிவிட்டதாக அருண் விஜய் நள்ளிரவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதை பெரிய பில்டப் செய்து வெளியிடலாம் என இருந்தேன் ஆனால் நேற்றே லீக் ஆகிவிட்டது என்றும் அதனால் தற்போது அதை அவசரமாக வெளியிட்டுள்ளனர் என அருண் விஜய் பேசியுள்ளார்.