நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்குகிறது.

மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடம்’ திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் ‘பாக்ஸர்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.
எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். குத்துச்சண்டை வீரராக அருண் விஜய் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ‘இறுதிச்சுற்று’ நாயகி ரித்திகா சிங் நடிக்கிறார் மேலும் இப்படத்தில் நிக்கி கல்ரானின் தங்கை சஞ்சனா கல்ரானி இணைத்துள்ளார் . இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்குகிறது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லா ஸ்டூடியோஸில் ‘பாக்ஸர்’ திரைப்படத்தின் பூஜை இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவிருப்பதாக தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கிற்காக நடிகர் அருண் விஜய் வரும் ஜூலை.5ம் தேதி வரை கால் ஷீட் ஒதுக்கியுள்ளார்.