777 Charlie Trailer

யானை படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு.. இதான் காரணம்.. புது ரிலீஸ் தேதி என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் - ஹரி இணையும் யானை படத்தின் புதிய ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Arun Vijay Hari Yaanai Movie Release Date Postponed

Also Read | விக்ரம் படத்தின் ஏஜெண்ட் டீனா.. நடிகை வசந்திக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் பாராட்டு விழா!

யானை, அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும்.  இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. மேலும் போஸ்டர்கள், சிங்கிள் பாடல் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.

நடிகர் அருண் விஜய் இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Arun Vijay Hari Yaanai Movie Release Date Postponed

இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த படம் வரும் நாட்களில் ஒளிபரப்பாகும்.

படத்தின் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் 17-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Arun Vijay Hari Yaanai Movie Release Date Postponed

இந்நிலையில் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியால், விக்ரம் படத்தின் ஓட்டத்திற்கு ஏற்றவாறு 'யானை' படத்தின் ரிலீஸ் ஜூலை மாதம் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசனுடன் இயக்குனர் ஹரி - அருண் விஜய் ஆகியோர் சந்தித்த பின்னர் இந்த அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு யானை படக்குழுவினர் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Also Read | 'நச்' கேப்சனில் மோட்டிவேஷன் கொடுத்த சமந்தா.. உடற்பயிற்சி செய்யும் வைரல் ஜிம் ஃபோட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Arun Vijay Hari Yaanai Movie Release Date Postponed

People looking for online information on Arun Vijay, Director Hari, Yaanai movie, Yaanai movie Release Updates will find this news story useful.