777 Charlie Trailer

“பெருமையாக இருக்கு”… லோகேஷுடன் ‘மாநகரம்’ பட நடிகர்… வைரலாகும் Tweet & Pic

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் படத்தின் வெற்றியால் லோகேஷ் கனகராஜ் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராகியுள்ளார்.

Actor sundeep kishan with lokesh viral pics

Also Read | இளையராஜா, AR ரஹ்மான், வைரமுத்து பங்குபெற்ற ‘SPB 75’… பிரபல சேனலில்..

விக்ரம் வெற்றி…

கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி  ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முன்னணியில் உள்ளது விக்ரம். தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம், தெலுங்கு மற்றும் வெளிநாடுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Actor sundeep kishan with lokesh vial pics

லோகேஷ் கதாபாத்திரங்கள்…

விக்ரம் திரைப்படத்தில் கைதி படத்தின் சில கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த cross over ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதுபோல படத்தின் இறுதியில் வரும் சூர்யா கதாபாத்திரமான ரோலக்ஸும் பெரிய அளவில் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்தடுத்து தான் இயக்கும் படங்களில் இந்த கதாபாத்திரங்கள் சந்தித்துக்கொள்ளும் தருணங்கள் அமையும் என லோகேஷ் கூறியுள்ளார். மேலும் ரசிகர்கள் “லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்” என்று பல பெயர்களை சொல்லி அழைத்து வருகின்றனர்.

Actor sundeep kishan with lokesh vial pics

வைரல் Tweet…

இந்நிலையில் லோகேஷின் முதல்படமான மாநகரம் படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன், தற்போது டிவிட்டரில் லோகேஷுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர அது வைரலாகி வருகிறது. அந்த டிவீட்டில் “உன் அழகான இதயத்தையும், மகத்தான இதயத்தையும் நினைத்து பெருமையாக இருக்கிறது மச்சான். லவ் யூ” என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

Also Read | S J சூர்யா பட தயாரிப்பாளர்களோடு கைகோர்த்த விமல்… Title உடன் வெளியான BTS pics

தொடர்புடைய இணைப்புகள்

Actor sundeep kishan with lokesh viral pics

People looking for online information on Lokesh Kanagaraj, Sundeep Kishan, Vikram Movie will find this news story useful.