777 Charlie Trailer

“கடவுளெனும் முதலாளி..” பாட்டு பாடிகிட்டு அமெரிக்காவில் விவசாயம்… வைரலாகும் நெப்போலியன் video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நெப்போலியன் அமெரிக்காவில் விவசாயம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor napoleon viral video farming in America

Also Read | இளையராஜா, AR ரஹ்மான், வைரமுத்து பங்குபெற்ற ‘SPB 75’… பிரபல சேனலில்..

அறிமுகமும் வளர்ச்சியும்

1990 களின் தொடக்கத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப் பட்டவர் நடிகர் நெப்போலியன். முதலில் வில்லன் வேடங்களில் மிரட்டிய இவர் பின்னர் கதாநாயகனாக பல வெற்றிப் படங்களில் நடித்தார். எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட படங்கள் இன்றளவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக உள்ளன. அரசியலிலும் ஈடுபட்ட அவர் திமுகவில்  அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

Actor napoleon viral video farming in America

சமீபத்தைய படங்கள்…

ஒரு கட்டத்தில் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்திலும் தன் முத்திரை பதித்துள்ளவர் நடிகர் நெப்போலியன். சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'சீமராஜா'வில் நடித்திருந்தார். அதேபோல கார்த்தியுடன் 'சுல்தான்'  மற்றும் ஹிப் ஹாப் ஆதியோடு அன்பறிவு ஆகிய படங்களிலும் நடித்து இருந்தார். மேலும் 'டிராப் சிட்டி' என்ற ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்துள்ளார்.

அமெரிக்காவில்  விவசாயம்…

தனது மகனின் மருத்துவத்திற்காக இப்போது அமெரிக்காவிலேயே தங்கிவிட்ட நெப்போலியன் அதிகளவில் தமிழ் படங்களில் நடிக்காமல் உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் தனது இடத்தில் விவசாயம் செய்துவரும் அவர் “கடவுளெனும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி” என்ற பாடலை பாடியவாறு “நான் அமெரிக்க விவசாயி” என்று கூறும் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor napoleon viral video farming in America

விண்டேஜ் அசுரன் பாட்டு…

சமீபத்தில் விக்ரம் படத்தில் அவர் நடித்த சக்கு சக்கு வத்திக்குச்சி இடம்பெற்று திடீர் ஹிட் ஆனதை அடுத்து அதுபற்றி “உலகநாயகன் கமல் சார் நடித்து தயாரித்து சென்றவாரம் வெளிவந்த விக்ரம் திரைப்படம் உலகெங்கும் மகத்தான வெற்றிபெற்று மிகப் பெரிய அளவில் வசூலை குவித்துக் கொண்டு இருக்கிறது..! இந்த படத்தில் 27 ஆண்டுகளுக்கு முன்பு RK செல்வமணி தயாரிப்பில், வேலுபிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் இருந்து நான் நடித்த “சக்கு சக்கு வத்திகுச்சி”என்ற பாடல் இடம் பெற்றது எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சி..! விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்க்கும் , கமல் சாருக்கும் மற்றும் படக் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..!!” எனவும் பதிவிட்டு இருந்தார்.

Also Read | “பெருமையாக இருக்கு”… லோகேஷுடன் ‘மாநகரம்’ பட நடிகர்… வைரலாகும் Tweet & Pic

“கடவுளெனும் முதலாளி..” பாட்டு பாடிகிட்டு அமெரிக்காவில் விவசாயம்… வைரலாகும் நெப்போலியன் VIDEO வீடியோ

Actor napoleon viral video farming in America

People looking for online information on Napoleon, Napoleon farming video in America will find this news story useful.