“ரொம்ப Emotional- ஆன கதை …” யானை Title ஏன்… இயக்குனர் ஹரியின் வைரல் Speech

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண் விஜய் முதல் முறையாக அவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிக்கும் யானை திரைப்படம் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Director hari viral speech in yaanai trailer launch

முதல் முறை கூட்டணி…

நடிகர் அருண் விஜய், இயக்குநர் ஹரி கூட்டணியில்  “யானை” திரைப்படம் முழு படப்பிடிப்பு பணிகளும் முடிந்து, ரிலீஸூக்கு தயாராக உள்ளன.  இப்படத்திற்காக  இராமேஸ்வரம், தூத்துகுடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னையில்  படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்த படத்தில் அருண்விஜய் உடன், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமம் மற்றும் நகர பின்னணியில் தன் வழக்கமான பரபர திரைக்கதையுடன்  இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார்.

Director hari viral speech in yaanai trailer launch

வெளியீடு…

ரிலீஸுக்கு தயாராகி வரும் யானை படத்தின் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை KKR சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.  இந்த யானை படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் OTT டிஜிட்டல் உரிமையை ஜி குரூப் கைப்பற்றி உள்ளது. ZEE5 OTT & ZEE தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் யானை திரைப்படம் சென்சாருக்கு தயாராகி வருவதாக அருண் விஜய் தெரிவித்திருந்தார். இதையடுத்து நேற்று ‘யானை’ படத்தின் டிரைலர் வெளியானது. சமூகவலைதளத்தில் இந்த டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டு இருந்தார்.

Director hari viral speech in yaanai trailer launch

இயக்குனர் ஹரி…

பரபரப்பான திரைக்கதை குடும்ப கமர்ஷியல் கதைகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குனர் ஹரி. அந்த வரிசையில் யானையும் இடம்பெறும் என அதன் டிரைலரைப் பார்க்கையில் தெரிகிறது. இந்நிலையில் யானை டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஹரியின் பேச்சு இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் படத்தைப் பற்றிய பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்ட அவர் யானை என்ற தலைப்பு வைத்தது குறித்து பேசினார். அப்போது “ இது ரொம்ப எமோஷனல் ஆன கதை. நம்ம வந்து ஒரு பிரச்சனைய தூக்கி சுமக்குறோம். குடும்பத்தை தூக்கி சுமக்கிறோம். நண்பன தூக்கி சுமக்கிறோம். ஒரு கட்டத்துல கோபம் வந்துச்சுன்னா விட்டுட்டு தூக்கிப் போட்டு ஒரு மிதி. அந்த பாய்ண்ட்தான். அப்படி ஒரு சின்ன கனெக்ஷன்தான் டைட்டிலுக்காக. மத்தபடி எப்ப பாத்தாலும் தூக்கி போட்டு மிதிச்சுட்டே இருக்கன்னு நெனைக்காதீங்க.” என பேசினார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் இப்போது கவனத்தைப் பெற்று வருகிறது.

Director hari viral speech in yaanai trailer launch

தொடர்புடைய இணைப்புகள்

Director hari viral speech in yaanai trailer launch

People looking for online information on Arun Vijay, Priya bhavani sankar, Yaanai will find this news story useful.