நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி & அருண் விஜய் நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’… டீசர் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நடிக்கும் படமாக உருவாகி வருகிறது ‘அக்னி சிறகுகள்’.

Vijay antnoy and arun vijay agni siragugal teaser update

மூடர்கூடம்…

‘மூடர் கூடம்’ திரைப்படத்தின் மூலம் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர் இயக்குநர் நவீன். அந்த படத்தில் அவரே முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய ‘அலாவுதீனும் அற்புத கேமராவும்’ என்ற படத்தைத் தொடங்கினார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.

அக்னிசிறகுகள்…

இதையடுத்து சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அக்னி சிறகுகள்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் நடித்து வருகின்றனர். மற்ற முக்கிய வேடங்களில்  அக்ஷரா ஹாசன், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.

Vijay antnoy and arun vijay agni siragugal teaser update

படப்பிடிப்பு…

இந்த படம் 2019 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.  ‘அக்னி சிறகுகள்’ திரைப்படத்தின் ஷூட்டிங்  பணிகள் கஜகஸ்தானில் உள்ள அல்மாட்டி பகுதியில் படமாக்கினார் இயக்குனர் நவீன். கஜகஸ்தானில் படமாக்கப்படும் முதல் இந்திய திரைப்படம் அக்னி சிறகுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay antnoy and arun vijay agni siragugal teaser update

டீசர் அப்டேட்…

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்காக  மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் நாளை (மே 27) வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Vijay antnoy and arun vijay agni siragugal teaser update

தொடர்புடைய இணைப்புகள்

Vijay antnoy and arun vijay agni siragugal teaser update

People looking for online information on Arun Vijay, Naveen, T siva will find this news story useful.