Yaanai

பாரிஸில் உள்ள பிரபல 3D அனிமேஷன் ஸ்டுடியோவில் ராஜமௌலி… லேட்டஸ்ட் viral புகைப்படம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் ராஜமௌலியின் சமீபத்தைய முகநூல் பதிவு ஒன்று இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

SS Rajamouli latest viral pic in paris animation studio

Also Read | நாயகன் மீண்டும் வரார் ‘ஓடிடி’யில் … “ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியிட்ட ‘தெறி’ அப்டேட்!

ராஜமௌலி

பாகுபலி இரண்டு பாகங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி  இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவராகியுள்ளார். அவர் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீஸான படம் "RRR".  ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு செந்தில்குமார் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார், இசையமைப்பாளராக கீரவாணி பணியாற்றினார்.

SS Rajamouli latest viral pic in paris animation studio

1000 கோடி வசூல்

RRR படம் முதல் நாளில் 223 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலாக ஈட்டியது. இது பாகுபலி படங்களின் முதல் நாள் வசூலை விட அதிகம் ஆகும். அதேபோல் முதல் மூன்று நாளில் 500 கோடி ரூபாயை மொத்த வசூலாக ஈட்டியது. ஒரு வாரத்தில் இந்த படம் 710 கோடி ரூபாயை மொத்த வசூலாக உலகம் முழுவதும் வசூலித்து உள்ளது என்று படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது இந்த படம் வெளியானது முதல் 16 நாட்களில் உலகளவில் பாக்ஸ் ஆபீஸீல் 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் அது கவனத்தை ஈர்த்து வருகிறது.

SS Rajamouli latest viral pic in paris animation studio

அடுத்த படம்

அடுத்தடுத்த வெற்றிகளால் ராஜமௌலியின் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அவரும் தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபுவும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது ராஜமௌலி பிரான்ஸ் நாட்டில் உள்ள ‘Unit Image - 3D Animation Films & Visual Effects’ நிறுவனத்தின் நிறுவனர்களை சந்தித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பு குறித்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “ஷோபு மற்றும் கமல் கண்ணனுடன் பாரிஸில் உள்ள 3டி அனிமேஷன் பிலிம்ஸ் விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டோம். நிறுவனத்தின் இணை நிறுவனர்களான Maxime Leure உடன் மிகவும் சுவாரஸ்யமான விவாதங்களை மேற்கொண்டோம். நேரம் ஒதுக்கி எங்களின் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்ததற்கு மிக்க நன்றி மேக்ஸ். சில எதிர்பார்ப்பூட்டும் வேலைகளில் இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறோம்…” எனக் கூறியுள்ளார். இதனால் ராஜமௌலியின் அடுத்த பட வேலைகள் இந்த ஸ்டுடியோவில் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Also Read | லிப்ரா ரவீந்தர் தயாரிப்பில் பரத் நடிக்கும் புதிய த்ரில்லர்… Title உடன் வெளியான ஃபர்ஸ்ட்லுக்

தொடர்புடைய இணைப்புகள்

SS Rajamouli latest viral pic in paris animation studio

People looking for online information on Paris animation studio, SS Rajamouli, SS Rajamouli latest Pictures will find this news story useful.