காஜல் அகர்வாலின் Women Centric படம் - 25 இடங்களில் கட் போட்ட Censor குழு!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 06, 2019 01:19 PM
காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள பாரிஸ் பாரிஸ் படத்துக்குத் தணிக்கைக் குழு மொத்தமாக 25 இடங்களில் கத்தரி போட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு கங்கனா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான க்யின் படம் மிகப்பெரிய வெற்றியை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெற்றது. இந்த படத்தைத் தென் இந்திய மொழிகளில் ரீமேக் செய்யும் பணிகள் ஒரே நேரத்தில் நடந்து வருகின்றன.
தமிழில் காஜல் அகர்வால் நடிப்பில் பாரீஸ் பாரீஸ் எனவும், தமன்னாவை நாயகியாகக்கொண்டு தெலுங்கில் தட் இஸ் மகாலெட்சுமி எனவும் மலையாளத்தில் மஞ்சிமா மோகனை நாயகியாகக்கொண்டு ஜம் ஜம் எனவும் நடிகை பருல் யாதவ்வை கதாநாயகியாகக்கொண்டு கன்னடத்தில் பட்டர்ஃப்ளை எனவும் உருவாகியுள்ளது. இதில் தமிழ் வெர்ஷனை ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார்.
இப்போது இந்தப் படத்தை தணிக்கைத் துறைக்கு அனுப்பியபோது ஆட்சேபிக்கத் தகுந்த சிலக் காட்சிகளுக்கு மங்கலாக்கவும், சில காட்சிகளில் ஆடியோவை ம்யூட் செய்தும், சில இடங்களில் ஆடியோ, வீடியோ இரண்டையும் வெட்ட சொல்லியும் மொத்தமாக 25 இடங்களில் கட் சொல்லியுள்ளனர். இதனால் படத்தை மறுசீராய்வுக்கு அனுப்பும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.