பிரபாஸின் Saaho ரிலீஸ் தள்ளிப்போகிறது? விவரம் உள்ளே
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 16, 2019 09:16 PM
‘பாகுபலி’ திரைப்படங்களை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே உருவாகியுள்ள ‘சாஹோ’ திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

சுஜீத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். நீல் நிதின் முகேஷ், லால், அருண் விஜய், வெண்ணிலா கிஷோர், மகேஷ் மஞ்சுரேகர், ஜாக்கி ஷராஃப், சங்கே பாண்டே, மந்திரா பேடி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘சாஹோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட்.15ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகள் தமதமாவதால் ‘சாஹோ’ படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட்.30ம் தேதிக்கு தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘பாகுபலி 2’ திரைப்படத்திற்கு பின் 2 ஆண்டுகள் கழித்து பிரபாஸ் நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.