'கே-13' படத்துக்கு பிறகு அருள்நிதி, ஜீவாவுடன் இணைந்து 'களத்தில் சந்திப்போம்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் அடுத்து நடிக்கும் படம் குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுவாக அருள்நிதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதிக கவனம் பெற்று வருகிறார். அந்த வகையில் தற்போது யூடியூபில் எருமசாணி புகழ் விஜய் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
இந்த படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் தயாரிக்கிறார். அரவிந்த் சிங், அருள் நிதி நடித்த 'ஆறாது சினம்', 'டிமாண்டி காலனி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'கே-13' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். இந்த படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்த படத்தின் கதையை விஜய் சொல்லக் கேட்ட அருள்நிதி உடனடியாக இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தாராம். இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.