அருள்நிதி, ஜீவா நடிக்கும் புதுப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

முதன் முறையாக நடிகர்கள் ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Arulnithi Jiiva's Kalathil Santhippom First look released

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை ‘மாப்பிள்ளை சிங்கம்’ படத்தை இயக்கிய ராஜசேகர் இயக்கி வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதில் ப்ரியா பவானி ஷங்கர்,மஞ்சிமா மோகன் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,‘களத்தில் சந்திப்போம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கபடி போட்டியை மையப்படுத்திய இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். இது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 90ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.