அருள்நிதி படத்தில் நடிக்கும் சிம்புவின் இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்புவை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் நடிக்கிறார்.

Director Adhik Ravichandran in Arulnithi -Shraddha Srinath starrer K13

பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து வரும் த்ரில்லர் படமான ‘கே 13’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் நடிக்கிறார். எஸ்பி சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர் மற்றும் சாந்த பிரியா ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த படத்தில் ஆதிக் ரவிச்சந்தர் நடிப்பது குறித்து பேசிய இயக்குநர் பரத், இப்படத்தில் முழு த்ரில்லர் விஷயங்களையும் தூண்டிவிடும் கதாபாத்திரத்தில் ஆதிக் ரவிச்சந்தர் நடிக்கிறார். அவருடன் இப்படத்தில் நடிகை காயத்ரியும் நடிக்கிறார். இப்படத்தில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்தர் வரும் காட்சிகள் மக்கள் மனதை கவரும், அவரது நடிப்பும் பாராட்டப்படும் என இயக்குநர் பரத் நீலகண்டன் தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்த ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்தர், தற்போது தல அஜித் நடித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஆதிக் நடித்து வருகிறார்.