ரகுமான், யுவன், அனிருத் : யாரை ‘இசை சுனாமி’ என்கிறார்கள்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் அவதாரம் எடுத்துள்ள நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு வைக்கப்பட்டுள்ள ‘இசை சுனாமி’ என்ற பட்டம் ட்ரெண்டாகி வருகிறது.

A.R.Rahman, Yuvan, Anirudh praises Isai Tsunami Premji Amaran

பிளாக் டிக்கெட் நிறுவனம் சார்பில் வெங்கட்பிரபு மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ள படம் ஆர்.கே.நகர். வைபவ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

வெங்கட்பிரபுவின் தம்பியும் நடிகருமான பிரேம்ஜி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இது தவிர, ‘பார்ட்டி’, ‘ஜாம்பி’ போன்ற திரைப்படங்களுக்கும் பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.

பிரேம்ஜி அமரனுக்கு கொடுக்கப்பட்டுள்ள ‘இசை சுனாமி’ என்ற பட்டம் பற்றி ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் ஆகியோர் பேசியுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.