அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இடம்பெறும் இந்தியன் மார்வெல் ஆன்தெம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
![Avengers:Endgame - A.R.Rahman's Indian version of Marvel Anthem has been released Avengers:Endgame - A.R.Rahman's Indian version of Marvel Anthem has been released](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/images/avengersendgame-arrahmans-indian-version-of-marvel-anthem-has-been-released-photos-pictures-stills.jpg)
உலக ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம் வரும் ஏப்.26ம் தேதி வெளியாகிறது.
கடந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம் பாதி கதையுடன் முடிந்து மார்வெல் ரசிகர்களை ஏமாற்றியது. அந்த படத்தின் வில்லனான தானோஸ் உலகின் பாதி மக்களை அழித்துவிட்ட நிலையில், ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம், அதன் தொடர்ச்சியாக சூப்பர் ஹீரோஸ் கூட்டணி ஒன்றாக இணைந்து மீதமுள்ள மக்களை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்ததுடன், எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெறும் ஆன்தெம் பாடல் ஒன்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் உருவாகியுள்ள இப்பாடல் இன்று (ஏப்ரல் 1-ம்) வெளியாகியுள்ளது.
அவெஞ்சர்ஸ் படங்களின் முந்தைய பாகங்களில் வந்த சூப்பர் ஹீரோஸின் மாஸ் கிளப்பும் காட்சிகள் இடம்பெறும் வகையில், ஏ.ஆர்.ரகுமானின் வேறலெவல் இசை இந்த மார்வெல் ஆன்தெமிற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
`அயர்ன்மேன்', `தார்', `கேப்டன் அமெரிக்கா', `ஸ்பைடர்-மேன்' எனப் பல சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியான அவெஞ்சர்ஸின் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தையும் சேர்த்து மொத்தம் 21 திரைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், இறுதிப்படமாக வெளியாகவிருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படம் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: ஏ.ஆர்.ரகுமானின் இசையில் மாஸ் கிளப்பும் சூப்பர் ஹீரோஸ் வீடியோ