ஏ.ஆர்.ரஹ்மான் ஜனாதிபதி மாளிகையில்... அப்துல் கலாம் ஃபோட்டோ வெளியிட்டு சொன்ன கமெண்ட்
முகப்பு > சினிமா செய்திகள்அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பெரும் பலமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் படத்தை பகிர்ந்துள்ளார். அதில், நமது ஹீரோக்களில் ஒருவர் ராஷ்டிரபதி பவன். குடியரசு தலைவரின் அழைப்பை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்துள்ள '99 சாங்ஸ்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் நிறுவனத்துடன் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
One of our heroes at the Rashtrapati Bhavan ..extremely grateful for the kind invitation by the President of 🇮🇳 ..for a special occasion! pic.twitter.com/Ung6rH03Ej
— A.R.Rahman (@arrahman) February 26, 2020