தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' படம் கடந்த வருடம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பெரும் பலமாக அமைந்திருந்தது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது விக்ரம் நடிக்கும் 'கோப்ரா', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அயலான்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதில் 'அயலான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கதை எழுதி, இசையமைத்து, தயாரித்துள்ள படம் '99 சாங்ஸ்'. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி விஸ்வேஸ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒய்.எம்.மூவிஸ் நிறுவனத்துடன் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெயல்ர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட, அதற்கு அட்லி, சிறப்பான டிரெய்லர் சார் பிடித்திருந்தது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என்றார். அதற்கு ரஹ்மான் நன்றி தெரிவித்தார்.
#99songs awesome trailer loved it sir kudos to the entire team https://t.co/EN0ps1Hkh9
— atlee (@Atlee_dir) February 18, 2020
ஏ.ஆர். ரஹ்மான் பட டிரெய்லருக்கு இயக்குநர் அட்லி கமெண்ட் வீடியோ