நகுல் தனது மனைவி குறித்து சொன்ன சுவாரஸியத் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ட்ரைவர் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

நகுல் தன் மனைவியுடன் பகிர்ந்த போட்டோ | nakkhul's new pic with his wife goes viral

பாய்ஸ் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நகுல். இதையடுத்து இவர் நடித்த காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்கள் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி கொடுத்தன. தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தில் இவரது கதாபாத்திரம் பெரிதும் ரசிக்கப்பட்டது. நடிப்பது மட்டுமன்றி சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களிலும் நகுல் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் நகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மனைவியுடன் இருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். ட்ரைவர் கெட்டப்பில் இருக்கும் அவர், மனைவிக்காக ட்ரைவர் மோட். இது அடிமைத்தனம், சாப்பாடு இல்லை, சம்பளம் இல்லை, நல்ல உடை இல்லை. ரொம்ப மோசமான பாஸ், நம்புங்க' என தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி, 'உங்களை விட நான் நன்றாக கார் ஓட்டுவேன், என உங்கள் அம்மாவே சொல்லியிருக்கிறார். நான் ஏன் உங்களை ட்ரைவராக வைக்க போகிறேன். இது எல்லாம் நாடகத்தனம்' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Entertainment sub editor

Tags : Nakul, Sei, Driver