தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றுவருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்தும் கலைஞர்கள் குழுவாகவும் தனிநபராகவும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்துகொண்டான். தன் திறமையால் பலரின் பாராட்டுக்களையும் தொடர்ந்து பெற்றுவந்தான்.
மேலும் போட்டியில் தன் அசாத்தியமான திறமையினால் இறுதிச்சுற்று வரை முன்னேறினான். இந்த இறுதிச் சுற்றில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் நடுவர்களாக பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து பட்டத்தை வென்று அசத்திய லிடியனுக்கு 1 மில்லியன் டாலர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக லிடியனுக்கு பல்வேறு பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அதனைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் லிடியனின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கு நாதஸ்வரம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானின் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான என்னவளே பாடலை லிடியன் பியானோவில் வாசிக்க, அவரது சகோதரி புல்லாங்குழல் இசைத்தார். பின்னர் லிடியனின் குடும்பத்தினருடன் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபோட்டோ எடுத்துக்கொண்டார்.
Lydian wins #cbs#world’s best ! https://t.co/O27OABQCDS
— A.R.Rahman (@arrahman) March 14, 2019
அப்போது நீங்கள் பியோனோவை வாசியுங்கள் என லிடியனின் தந்தை ரஹ்மானைக் கேட்க, சிறிது நேரம் வாசித்து விட்டு நீயே வாசிடா என்று சிரி்ததுக்கொண்டு நகர்ந்துவிட்டார். இந்த வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.