''உண்மைய சொல்லணும்னா நான் தளபதி ஃபேன்'' - சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீயான் விக்ரமின் துருவ் விக்ரம் ஆதித்யா வர்மா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். தெலுங்கில் வெற்றி பெற்ற அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை கிரீசயா இயக்குகிறார்.

Adithya Varma hero Dhruv Vikram speaks about Thalapathy Vijay

E4 Entertainment தயாரித்துள்ள இந்த படத்துக்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். ரதன் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது.  இந்த படத்தில் இருந்து எதற்கடி வலி தந்தாய் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் துருவ் விக்ரம் கலந்து கொண்டார். அப்போது மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர், நீங்கள் தல ரசிகரா ? தளபதி ரசிகரா என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த அவர், உண்மைய சொல்லணும்னா நான் தளபதி ஃபேன் என்றார். துருவ் விக்ரம் அப்படி சொன்னதும் அங்கிருந்த மாணவர்களின் கரகோஷத்தால் அரங்கம் அதிர்ந்தது.