குழந்தையாக இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்ட பிரபல ஹீரோயின் - யாருனு தெரியுதா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஊரடங்கின் போது பிரபலங்கள் வித்தியாசமான சமூக வலைதளப்பதிவுகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அவை அவ்வப்போது வைரலாகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று தமிழ் புத்தாண்டு மற்றும் விசு பண்டிகைகள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Anupama Parameswaran shares her childhood picture as Vishu special | அனுபமா பரமேஸ்வரன் தன் குழந்தைப்பருவ ஃபோட்டோவை பகிர்ந்து விஷூ வாழ்

அதன் ஒரு பகுதியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறு வயதில் கிருஷ்ணர் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு , விஷூ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மலையாளத்தில் அல்போன்ஸ் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரமேம் படத்தில் மேரி ஜார்ஜ் என்ற வேடத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன். அதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷுடன் கொடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy vishu 🌾 #kinderkrishna

A post shared by Anupama Parameswaran (@anupamaparameswaran96) on

Entertainment sub editor